பயிர் சுழற்சி முறைக்கு கைகொடுக்கும் பாசிப்பயறு!

ஒரே ரகப் பயிருக்கு சுழற்சிமுறை மாற்றுப் பயிராக கோ-8 ரகப் பாசிப்பயறு சாகுபடி செய்தால், குறுகிய காலத்தில் விவசாயிகளுக்கு அதிக
பயிர் சுழற்சி முறைக்கு கைகொடுக்கும் பாசிப்பயறு!

மேலூர்: ஒரே ரகப் பயிருக்கு சுழற்சிமுறை மாற்றுப் பயிராக கோ-8 ரகப் பாசிப்பயறு சாகுபடி செய்தால், குறுகிய காலத்தில் விவசாயிகளுக்கு அதிக லாபத்தையும், நிலத்தில் நுண்ணூட்டச் சத்துக்களையும் அதிகரிக்கலாம் என மதுரை வேளாண்மை அறிவியல் மையம் அறிவுறுத்தியுள்ளது.
விளைநிலத்தில் பயிர் சுழற்சி முறையில் சாகுபடிசெய்யப்பட்டுள்ள பயிரில் ஊடுபயிராகவும், மண்ணில்நுண்ணூட்டச்சத்துக்களை அதிகரிக்கவும் பாசிப்பயறு கோ-8 ரகம் மிகவும் சிறந்தது. பயறு வகைப் பயிர் சாகுபடியில் வேரின் முடிச்சுக்களில் வாழ்கின்ற பாக்டீரியாக்கள் வளிமண்டலக் காற்றில் கரைந்துள்ள தழைச்சத்துக்களை கிரகித்து பயிருக்கு வழங்கும். வேர்கள்அடிமண்ணில் இருப்பதால் மண்ணின் இறுக்கத்தைக் குறைத்து காற்றோட்டத்தை உருவாக்கும்.
பயறுவகைப் பயிர்களில் பயறு முதிர்ச்சிஅடையும் தருணத்தில் செடிகளின் இலைகள் நிலத்தில் உதிர்வதால் மண்ணில் அங்ககச் சத்துக்களை அதிகரிக்கிறது. அத்துடன் பாசிப்பயறு மிகவும் குறைந்த முதலீட்டில் அதிக மகசூலையும், லாபத்தையும் தருகிறது. 
நிலம் பண்படுத்துதல்: நிலத்தை நன்கு புழுதி உழவு செய்து வடிகால்வசதி செய்து பயறுவகைப் பயிர்களை விதைக்கலாம். பயறு ரகத்துக்கு ஏற்றவாறு பார்களை அமைத்து விதையை பதிவு செய்யலாம். விதையைப் பதிக்கும் முன்னர் விதைநேர்த்தி செய்யவேண்டும். ஒரு கிலோ விதைக்கு இமிடா குளோபிரிட் கலக்கலாம். சான்றிதழ்பெற்ற விதைகளையேவிவசாயிகள்பயன்படுத்தவேண்டும். 
உர நிர்வாகம்: ஒரு ஏக்கருக்கு 10 வண்டிமக்கிய தொழுஉரத்தை தரிசில் அடியுரமாகப் போடவேண்டும். விதைக்கும் முன் 20 கிலோ யூரியா, சூப்பர்பாஸ்பேட் 60 கிலோ பொட்டாஷ் 10 கிலோவும் இடவேண்டும். விதையை பதித்தோ அல்லது விதைத்த பின்போ முதல் தண்ணீர் விடவேண்டும். மூன்றாம்நாள் உயிர் தண்ணீர் விடவேண்டும். பின்னர் மண்ணின் தன்மைக்கு ஏற்ப நீர் பாய்ச்சவேண்டும். செடிகளில் காய் பிடிக்கும்தருணத்தில் அவசியம் தண்ணீர் பாய்ச்சவேண்டும். நிலத்தில் வறட்சி ற்படாமல்பாராமரிக்கவேண்டும்.
களை மருந்து பராமரிப்பு: விதைத்த 15-வது நாளில் ஒருமுறையும் அடுத்த 15-வது நாளில் ஒருமுறையும் களை வெட்டுவது அவசியம். பயறுவகை செடிகளில் வறட்சியில் பூக்கள் அதிகம் உதிர்வதைத் தடுக்க பூ பூக்கும்தருணத்தில் தானுப்ளூசி வோன்டர் கரைசலை ஏக்கருக்கு 2 கிலோவை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். நீரில் தெளிப்புத் திரவம் கலந்து தெளிப்பதால் பயிரின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
அறுவடை: பயறு வகைகளைப் பொருத்தவரை இரண்டு அல்லதுமூன்று முறை அறுவடை செய்யவேண்டும். ஒனால் கோ- 8 ரகம் விதைத்ததில் இருந்து 65 70 நாள்களுக்குள் பயறு ஒரேசீராக வளர்ச்சி அடைவதால் ஒரேமுறையில்அறுவடைசெய்யலாம். கதிர்அறுவடை இயந்திரம் மூலமாகவும் அறுவடைசெய்யலாம். ஒரு ஏக்கருக்கு 450முதல் 520 கிலோமகசூல்கிடைக்கும். இன்று சந்தையில் ஒரு கிலோ பாசிப்பயறு கிலோ 70ரூபாய். 65 நாளி ல் குறைந்தபட்சம் 33000 ரூபாயை விவசாயிபெறலாம் என மதுரை வேளாண் அறிவியல்மையத்தினர் தெரிவித்தனர்.
தற்போதை பருவமழை சாதமான சூழ்நிலையில் பயறுவகை சாகுபடிதொடர்பானசேவை தொழில் நுட்பங்களுக்கு மதுரை வேளாண்மைக் கல்லூரி வளாகத்திலுள்ள வேளாண். அறிவியல் மையத்தை விவசாயிகள் அணுகலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com