மா சாகுபடி: நுனி தண்டு அழுகல் நோய் மேலாண்மை

விவசாயிகளுக்கு அதிக வருவாய் ஈட்டக்கூடிய பயிரான மாவில் நுனி தண்டு அழுகல் அல்லது பின் கருகல் நோய் தாக்குதல் பரவலாகக் காணப்படுகிறது.
நுனி தண்டு அழுகல் நோய் பாதிப்புக்கு உள்ளான மா மரம்.
நுனி தண்டு அழுகல் நோய் பாதிப்புக்கு உள்ளான மா மரம்.

கிருஷ்ணகிரி: விவசாயிகளுக்கு அதிக வருவாய் ஈட்டக்கூடிய பயிரான மாவில் நுனி தண்டு அழுகல் அல்லது பின் கருகல் நோய் தாக்குதல் பரவலாகக் காணப்படுகிறது.
இந்த நோய் தாக்குதலைத் தொடக்க நிலையில் கண்டறியப்பட்டு, கட்டுப்படுத்தப்படாவிட்டால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தக் கூடியது. இந்த நோய்த் தாக்குதலானது குறிப்பாக பெங்களூரா என்ற ரகத்தில் குறிப்பாக 5 முதல் 10 வயதுக்கு உள்பட்ட மா பயிரை தாக்குகிறது. இந்த நோய் மேலாண்மைக் குறித்து கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கிரி கிராமத்தில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் தோ. சுந்தராஜ் விளக்குகிறார்.
அறிகுறிகள்:இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளான மா மரத்தின் ஒரு பக்க கிளைகள் மேலிருந்து கீழ் நோக்கி வாடத் தொடங்கும். மேலும், கிளைகளின் அடிப்பகுதியில் பழுப்பு நிற பிசின் போன்ற திரவம் வடியத் தொடங்கும். பின்னர், பிசின் வடிந்த பகுதியின் கிளையானது நீள வாக்கில் பட்டைகள் வெடித்து காணப்படும். நோய் தாக்குதலுக்கு உள்ளான மரத்தின் தண்டு பகுதியிலும் இதுபோன்று அறிகுறிகள் காணப்படும். இந்த நோயை முற்றிலும் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் மரம் முழுவதும் காய்ந்துவிடும்.
நோய் மேலாண்மை:நோய் தாக்குதளுக்கு உள்ளான மரத்தின் கிளைப் பகுதியை முற்றிலும் வெட்டி அகற்றவேண்டும். பின்னர் வெட்டி எடுத்த மரத்தின் பகுதியில் கார்பெண்டசிம் என்ற பூஞ்சண கொல்லி மருந்தை கொண்டு (2சதம்) தடவ வேண்டும். 
தயோபினட் மீத்தைல் (லீட்டருக்கு 2 கிராம்) என்ற அளவில் நீரில் கலந்து நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும். மேலும், நோய் தாக்குதலுக்கு உள்ளான மரத்துக்கு தேவையான நீர் மற்றும் சரியான உர பரிந்துரைகளை கடைப்பிடிக்க வேண்டும். விவசாயிகள் மேற்கண்ட பயிர் மேலாண்மை அல்லது பயிர் பாதுகாப்பு முறையை கையாண்டு நோய் தாக்குதலில் இருந்து மா பயிரை பாதுகாக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு தோ.சுந்தராஜ், தலைவர் மற்றும் முதுநிலை விஞ்ஞானி, வேளாண் அறிவியல் மையம், எலுமிச்சங்கிரி, கிருஷ்ணகிரி மாவட்டம் என்ற முகவரியிலோ அல்லது 94438 88644 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com