வருமான வரி சோதனைகளுக்கு காங்கிரஸ் அஞ்சாது: முதல்வர் சித்தராமையா

வருமான வரி சோதனைகளுக்கு காங்கிரஸ் ஒதுபோதும் அஞ்சாது என்றார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
வருமான வரி சோதனைகளுக்கு காங்கிரஸ் அஞ்சாது: முதல்வர் சித்தராமையா

வருமான வரி சோதனைகளுக்கு காங்கிரஸ் ஒதுபோதும் அஞ்சாது என்றார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.

இதுகுறித்து மைசூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: வருமான வரித் துறை அதிகாரிகள் ஒருவரின் வீடு, அலுவலகங்களில்சோதனை நடத்துவதால் அந்த நபர் தவறு செய்திருக்கிறரா? தவறு செய்யாதவரா? என்பதை கணிக்க முடியாது. எனவே, வருமான வரி சோதனை என்பது பெரிய விஷயமல்ல. வருமான வரியை சரியாக செலுத்தியிருக்கிறார்களா? என்பதை அந்த அதிகாரிகள் சரிபார்ப்பார்கள். எனவே, இதுபோன்ற வருமான வரி சோதனைகளுக்கெல்லம் காங்கிரஸ் அஞ்சாது.

ஆனால், வருமான வரி சோதனை என்பது காங்கிரஸ் கட்சியினர் மீது தொடுக்கப்படுவது ஏன்? என்பது தெரியவில்லை. குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அகமதுபடேல் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் பாஜகவின் தீய எண்ணம் வெளிப்பட்டுள்ளது. குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களை குதிரைபேரம் பேசி வாங்க பாஜக முயற்சி செய்து, தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் அகமதுபடேலின் வெற்றி, ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

தேசிய பேரிடர் வளநிதி (என்டிஆர்எஃப்) என்ற பெயரை மாற்றக் கூடாது என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். தேசிய பேரிடர் வளநிதியின் புதிய நடைமுறைகள் விவசாயிகளுக்கு பயன் தராது. வடுபோன ஏரிகளை வருவாய் ஆவணங்களில்காலி இடங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்தவிவகாரம் குறித்துவிவாதம் நடந்தது.

பெங்களூரில் அமைந்துள்ள பேருந்து நிலத்தை வருவாய் ஆவணங்களில் இன்றும் ஏரி என்று குறிப்பிட்டுள்ளனர். எனினும், இந்த ஏரிகளை அதிலிருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று முடிவு எதுவும் எடுக்கவில்லை. இந்தவிவகாரத்தில் ஒருசில சுயநலவாதிகள் உள்ளனர். லிங்காயத்து மற்றும் வீரசைவர் சமுதாயத்தை நான் பிளவுப்படுத்த நினைக்கவில்லை என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com