தில்லியில் ஆக. 28-இல் தேசிய ரியல் எஸ்டேட் கவுன்சில் மாநாடு

தேசிய ரியல் எஸ்டேட் கவுன்சில் (நேரெட்கோ) சார்பில் தில்லியில் ஆக. 28, 29-ஆம் தேதிகளில் மாநாடு நடைபெற உள்ளது.

தேசிய ரியல் எஸ்டேட் கவுன்சில் (நேரெட்கோ) சார்பில் தில்லியில் ஆக. 28, 29-ஆம் தேதிகளில் மாநாடு நடைபெற உள்ளது.
 இதுகுறித்து வெள்ளிக்கிழமை கவுன்சிலின் கர்நாடக அவைத் தலைவர் சாகுந்தலா ஐயர் கூறியது:
 மத்திய அரசு ரியல் எஸ்டேட் கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சிக்கான சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதனால், ரியல் எஸ்டேட் வர்த்தகம் குறைந்துள்ளது. இதனால் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் மட்டுமன்றி நுகர்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதுகுறித்து அரசு உரிய சட்டத் திருத்தை அமல்படுத்த வேண்டும்.
 மேலும், ரியல் எஸ்டேட்டில் உள்ள பிரச்னைகள் குறித்து விவாதிக்கும் வகையில் தில்லியில் ஆக. 28,29-ஆம் தேதிகளில் தேசிய ரியல் எஸ்டேட் கவுன்சில் சார்பில் மாநாடு நடைபெறுகிறது. அதில் ரியல் எஸ்டேட் துறையினர் சந்தித்து வரும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் குறித்து விவாதிக்கப்படும் என்றார்.
 தேசிய ரியல் எஸ்டேட் கவுன்சிலின் கர்நாடக தலைவர் மனோஜ் லோதா பேசியது: வரும் நாள்களில் கர்நாடகத்தில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். கர்நாடகத்தில் பெங்களூரு, பெலகாவி, தாவணகெரே, ஹுப்பள்ளி-தார்வாட், மங்களூரு, சிவமொக்கா, தும்கூரு உள்ளிட்ட நகரங்களை பொலியுறு நகரமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அனைவருக்கும் இல்லம் திட்டத்தினால் மாநிலத்தில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com