பாஜகவில் சேருகிறாரா கன்னட நடிகர் உபேந்திரா?

கன்னட நடிகர் உபேந்திரா, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தலைமையில் அக்கட்சியில் சேரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜகவில் சேருகிறாரா கன்னட நடிகர் உபேந்திரா?

கன்னட நடிகர் உபேந்திரா, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தலைமையில் அக்கட்சியில் சேரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கன்னட திரையுலகில் 50-க்கும் மேற்பட்ட கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகர் உபேந்திரா. 1989-ஆம் ஆண்டில் 'அனந்த அவதாரா' மூலம் கன்னட திரைப்படத்தில் கால்வைத்த உபேந்திரா, கந்தாயணம், உபேந்திரா,பிரீத்சே, சூப்பர் ஸ்டார், ஹாலிவுட், குடும்பா, ரக்தகண்ணீரு , கோகர்ணா , ஓம்காரா, கெளரம்மா, ஆட்டோ சங்கர், ஐஸ்வர்யா, அனாதரு, புத்திவந்தா, சூப்பர், கல்பனா, சன் ஆஃப் சத்தியமூர்த்தி, உப்பி-2, கல்பனா-2, முகுந்தா முராரி உள்ளிட்ட பல வெற்றிவிழா திரைப்படங்களை வழங்கி பிரபலமாக நடிகராகத் திகழ்ந்துவருகிறார்.

இவர்,அவ்வப்போது தனது சுட்டுரை பக்கத்தின் மூலம் சமூக, அரசியல் குறித்து கருத்துகளை வெளியிட்டு வந்துள்ளார். ஆரம்பகாலத்தில் இருந்தே தனது படங்களில் அரசியல் நடவடிக்கைகளை நையாண்டி செய்யும் வசனங்களை வைத்து தனக்கும் சமூக அக்கறை இருப்பதை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா, சனிக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு பெங்களூரில் முகாமிட்டு கட்சியினருடன் விவாதம் நடத்தவிருக்கிறார். மேலும் ஒருசிலரை ஐந்து நட்சத்திர உணவகத்தில் சனிக்கிழமை மாலை 6.15 மணிக்கு அமித்ஷா சந்திக்கவிருக்கிறார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நடிகர் உபேந்திராவுக்கு பாஜகவின் மூத்த தலைவர் ஆர்.அசோக் மூலம் நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பை ஏற்று அமித்ஷா கூட்டத்தில் உபேந்திரா கலந்து கொள்ளவிருக்கிறார். இந்த சந்திப்பின்போதுதான் பாஜகவில் சேரும் எண்ணத்தை அமித்ஷாவின் உபேந்திரா வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை உறுதிப்படுத்த மறுத்த பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் எஸ்.சுரேஷ்குமார்,"சமூக சிந்தனையுள்ள நடிகர் உபேந்திரா, அரசியலில் ஆர்வம் காட்டிவருவதை அறிவோம். ஆனால், பாஜகவில் சேருகிறார் என்ற தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை. ஒருவேளை அவர் பாஜகவில் சேர்ந்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்றார்.

இதனிடையே, இதுகுறித்து தனது சுட்டுரையில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் உபேந்திரா,"அரசியலில் ஈடுபடவிரும்புகிறேன். ஆனால், பணம் செலவில்லாமல் சமூகவலைத்தளங்களில் மட்டும் அரசியலில் ஈடுபடுவேன். அரசியலுக்கு பணம் செலவிடுவதை நான் எதிர்க்கிறேன். பணக்காரர்கள் மட்டுமே அரசியலில் ஈடுபட முடியும் என்பதை உடைத்தெறிய வேண்டும். இதில் என்னோடு இணைந்து செயலாற்ற மக்களை அழைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். பாஜகவில் சேராவிட்டால், நடிகர் உபேந்திரா தனிக்கட்சி தொடங்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.


















































































































 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com