மஜத அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸில் இணைய முடிவு: மஜத அதிருப்தி எம்எல்ஏ அகமதுகான் தகவல்

மதச் சார்பற்ற ஜனதா தள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும் காங்கிரஸில் இணைய முடிவு செய்துள்ளதாக மஜத அதிருப்தி எம்எல்ஏ அகமதுகான் தெரிவித்தார்.

மதச் சார்பற்ற ஜனதா தள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும் காங்கிரஸில் இணைய முடிவு செய்துள்ளதாக மஜத அதிருப்தி எம்எல்ஏ அகமதுகான் தெரிவித்தார்.
 இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 மஜதவில் அதிருப்தி அடைந்துள்ள 7 எம்எல்ஏக்கள், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேரவிருக்கிறார்கள். டிசம்பர் மாதத்தில் தில்லியில் ராகுல் காந்தி தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இணைவார்கள்.
 அதன்பிறகு, பெங்களூரில் மிகப்பெரிய மாநாடு நடத்தி காட்டுவோம்.
 அதிருப்தி 7 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியுடன் தொடர்பில் இருக்கிறார்கள். எனவே, அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 7 அதிருப்தி எம்எல்ஏக்களும் காங்கிரஸ் வேட்பாளர்களாகப் போட்டியிடுவார்கள் என்றார்.
 அப்போது, உடனிருந்த மஜத அதிருப்தி எம்எல்ஏ செலுவராயசாமி கூறுகையில்,"கர்நாடகத்திற்கு சனிக்கிழமை வரும் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, ஞாயிற்றுக்கிழமை ஆதிசுன்சுனகிரி மடத்திற்கு சென்று அதன் பீடாதிபதி நிர்மாலனந்தசுவாமிகளைச் சந்தித்து ஆசி பெறவிருக்கிறார்.
 ஆதிசுன்சுனகிரி மடம் அனைவருக்கும் பொதுவானதாகும். அந்தவகையில் அமித்ஷா, மடாதிபதியைச் சந்திக்கலாம். எனவே, இதற்கு அரசியல் சாயம் பூசவேண்டிய அவசியமில்லை" என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com