ராய்ச்சூரில் இன்று காங்கிரஸ் மண்டல மாநாடு: ராகுல்காந்தி பங்கேற்கிறார்

கர்நாடக மாநிலம், ராய்ச்சூரில் சனிக்கிழமை நடைபெறும் காங்கிரஸ் மண்டல மாநாட்டில் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிறார்.
ராய்ச்சூரில் இன்று காங்கிரஸ் மண்டல மாநாடு: ராகுல்காந்தி பங்கேற்கிறார்

கர்நாடக மாநிலம், ராய்ச்சூரில் இன்று நடைபெறும் காங்கிரஸ் மண்டல மாநாட்டில் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிறார்.

கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற போட்டி ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சிகளான பாஜக, மஜத ஆகிய கட்சிகளிடையே நடந்து வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் களத்திற்கு தயாராகி கொண்டுள்ளன.

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, ஆக.12-ஆம் தேதி முதல் கர்நாடகத்தில் மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் செய்து கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்து கட்சியின் முன்னணியினரிடம் விவாதிக்கவிருக்கிறார்.

பாஜகவின் தேர்தல் வியூகத்தை முறியடிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியும் பிரசாரங்களை முடுக்கிவிட்டுள்ளது.

அமித்ஷாவைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தியும் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருக்கிறார்.

கர்நாடக மாநிலம், ராய்ச்சூரில் சனிக்கிழமை(ஆக.12) நடக்கவிருக்கும் காங்கிரஸ் கட்சியின் மண்டல மாநாட்டில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசுகிறார்.

இந்த மாநாட்டில் பீதர், ராய்ச்சூரு, கலபுர்கி, யாதகிரி, கொப்பள், பெல்லாரி மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து, ஆக.16-ஆம் தேதி கர்நாடகத்திற்கு மீண்டும் வரும் ராகுல்காந்தி, பெங்களூரு மாநகராட்சிக்குள்பட்ட 126 வார்டுகளில் மலிவு விலை இந்திரா உணவகங்களைத் திறந்துவைக்கவிருக்கிறார். அன்று மாலை 6 மணிக்கு பெங்களூரு, பசவனகுடியில் உள்ள நேஷனல் கல்லூரியில் காங்கிரஸ் மாநாடு நடக்கவிருக்கிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு ராகுல்காந்தி பேசவிருக்கிறார்.

காங்கிரஸ் இல்லா இந்தியாவை உருவாக்கப் போவதாக பிரதமர் மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவும் பிரகடனப்படுத்தி, அதற்கான செயல் திட்டத்தை முனைப்புடன் செயலாற்றிவரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பெங்களூரில் ஆக.16-ஆம் தேதி 'பாஜகவை வெளியேற்றுவோம்' பிரசாரத்தை ராகுல்காந்தி தொடங்கவிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து,பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பல்வேறு பிரசாரக் கூட்டத்திலும் கலந்து கொள்ள ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com