ஆக.17-இல் முரசொலி மாறன் பிறந்த நாள் விழா

கர்நாடக மாநில திமுக சார்பில், பெங்களூரில் ஆக.17-ஆம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

கர்நாடக மாநில திமுக சார்பில், பெங்களூரில் ஆக.17-ஆம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
இதுகுறித்து கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்தி: கர்நாடக மாநில திமுக சார்பில் பெங்களூரு, ராமசந்திரபுரத்தில் உள்ள கலைஞரகத்தில் ஆக.17-ஆம் தேதி காலை 10 மணிக்கு திமுக முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 84-ஆவது பிறந்தநாள் விழா மாநில திமுக அவைத் தலைவர் மொ.பெரியசாமி தலைமையில், மாநில பொருளர் கே.தட்சிணாமூர்த்தி முன்னிலையில் நடத்தப்படுகிறது. அப்போது, அவரது உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்போருக்கு இனிப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்த விழாவில் மாநில நிர்வாகிகள், தலைமை பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாநில இளைஞர் அணி, இலக்கிய அணி, மகளிர் அணி, தொமுச பேரவை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com