பெங்களூரில் தமிழ்ப் பதாகைகள் கிழிப்பு: கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் கண்டனம்

பெங்களூரில் தமிழ்ப் பதாகைகள், சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டதற்கு கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பெங்களூரில் தமிழ்ப் பதாகைகள், சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டதற்கு கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத் தலைவர் சி.இராசன் வெளியிட்ட அறிக்கை:
 பெங்களூரு புலிகேசி நகரில் ஆடிக் கிருத்திகை விழா தொடர்பாக தமிழ் மொழியில் அச்சிடப்பட்டு வைக்கப்பட்டிருந்த பதாகைகளை தமிழ் மொழிக்கெதிரான சில அமைப்பினர் கிழித்தெறிந்த நிகழ்வு மொழிச் சிறுபான்மையினரான தமிழ் மக்களிடையே கொந்தளிப்பையும், அதிர்வலையும் ஏற்படுத்தியுள்ளது.
 கர்நாடகத்தில் மொழிச் சிறுபான்மையினராக வாழும் தமிழர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் ஏதாவதொரு வடிவத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதுபோன்ற வன்செயல்களை கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது கர்நாடக மாநில வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.
 தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை செயல்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும். மேலும், இதுபோன்ற செயல்கள் பொது அமைதிக்கும் குந்தகம் ஏற்படுத்தும். கர்நாடகத்தில் செயல்பட்டுவரும் மக்களாட்சி அமைப்புகள் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களைக் கண்டிக்கத் தவறக் கூடாது. இந்த நிகழ்வில் தொடர்புடைய சட்ட விரோதிகளை உடனடியாக கைது செய்து, தகுந்த நடவடிக்கைக்கு உள்படுத்த வேண்டும் என்று கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் கேட்டுக் கொள்வதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com