கெளரவ சிற்பக்கலை விருதுகள் அறிவிப்பு

கர்நாடக சிற்பக்கலை அகாதெமி வழங்கும் 2017-ஆம் ஆண்டுக்கான கெளரவ சிற்பக்கலை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கர்நாடக சிற்பக்கலை அகாதெமி வழங்கும் 2017-ஆம் ஆண்டுக்கான கெளரவ சிற்பக்கலை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கர்நாடக சிற்பக்கலை அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கர்நாடக சிற்பக்கலை அகாதெமி சார்பில் 2017-ஆம் ஆண்டுக்கான கெளரவ சிற்பக்கலை விருதுக்கு மகாதேவப்பா சம்புலிங்கப்பா சில்பி(கலபுர்கி), ஷியாம்சுந்தர்பட்(மைசூரு), மானப்பா சங்கரப்பா படிகேர(விஜயபுரா), ஜான் தேவராஜ்(பெங்களூரு), எம்.ராமமூர்த்தி(பெங்களூரு) ஆகிய 5 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விருதுடன் தலா 50 ஆயிரம் ரொக்கம், பட்டயம் வழங்கப்படும். இந்த விருதுகள் ஜனவரியில் பெங்களூரில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது.
சிறந்த சிற்பங்கள்: கர்நாடக சிற்பக்கலை அகாதெமி சார்பில் பெங்களூரில் கடந்த சில நாள்களாக நடைபெறும் சிற்பக்கலை கண்காட்சியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிற்பிகள் செதுக்கிய 110 சிற்பங்கள் இடம்பெற்றிருந்தன. 
இதில் 6 சிற்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. வெற்றிபெற்ற கோபாலகம்மார(பெங்களூரு), என்.நவ்யா(பெங்களூரு), கே.விஷால்(சிவமொக்கா), எம்.தேவராஜ்(பெங்களூரு), வி.நாகராஜ்(பெங்களூரு), டி.ஆர்.மகேஷ்(ராமநகரம்). இவர்களுக்கு ரூ.25 ஆகியோருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. 
சிற்பம் ராம்சன்ஸ் அறக்கட்டளை-மைசூரு விருதுக்கு மெளனேஷ் கே.கம்பாரா(யாதகிரி), டி.கே.எஸ்.ஆர்.பி.கங்காதர் எம்.படிகேரெ விருதுக்கு விட்டல்ராயப்பா கம்பாரா(ராமநகரம்), சாஸ்திரி நாகேந்திராச்சார்யா நினைவு விருதுக்கு என்.தட்சிணாமூர்த்தி(மைசூரு)தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com