பெங்களூரு-கச்சேகுடா இடையே சிறப்பு ரயில்

பெங்களூரிலிருந்து கச்சேகுடா ரயில்நிலையத்திற்கு கூடுதல் கட்டணத்துடன் கூடிய சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

பெங்களூரிலிருந்து கச்சேகுடா ரயில்நிலையத்திற்கு கூடுதல் கட்டணத்துடன் கூடிய சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 தெற்கு ரயில்வேயின் ஆலோசனைப்படி, கூட்டநெரிசலை குறைப்பதற்காக பெங்களூருவில்(கிருஷ்ணராஜபுரம்)இருந்து கச்சேகுடாவுக்கு(ஹைதராபாத்) இயக்கப்படும் ரயில் எண்கள்-07603/07604-கச்சேகுடா-பெங்களூரு(கிருஷ்ணராஜபுரம்)-கச்சேகுடா சிறப்பு விரைவுரயில் 12 நடைகளுக்கு இயக்கப்படுகிறது. இந்த சேவை டிச.10 முதல் அடுத்த ஆண்டு பிப்.26-ஆம் தேதிவரை வழங்கப்படுகிறது. 
ரயில் எண்-07603-கச்சேகுடா-பெங்களூரு(கிருஷ்ணராஜபுரம்)சிறப்பு விரைவுரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் கச்சேகுடா ரயில்நிலையத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு, திங்கள்கிழமைகளில் காலை 6 மணிக்கு பெங்களூரு (கிருஷ்ணராஜபுரம்)ரயில் நிலையம் வந்தடைகிறது. 
மறு மார்க்கத்தில், ரயில் எண்-07604-பெங்களூரு(கிருஷ்ணராஜபுரம்)-கச்சேகுடா சிறப்பு விரைவுரயில் திங்கள்கிழமைகளில் மாலை 3.25 மணிக்கு பெங்களூரு(கிருஷ்ணராஜபுரம்) ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு, செவ்வாய்க்கிழமைகளில் காலை 6.55 மணிக்கு கச்சேகுடா ரயில்நிலையம் சென்றடைகிறது. 
இந்த ரயில் பெங்களூரு யஷ்வந்த்பூர் ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு எலஹங்கா, ஹிந்துபூர், பெனுகொன்டா, ஸ்ரீசாய்பிரசாந்திநிலையம், தர்மாவரம், அனந்த்பூர், கூட்டி, தோனே, கர்னூர் டவுன், கட்வால், மஹபூப்நகர், ஜடசேரியா வழியாக கச்சேகுடா ரயில்நிலையத்தை சென்றடைகிறது. ரயிலில் ஈரடுக்கு குளிரூட்டப்பட்ட ஒரு பெட்டி, மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட 2 பெட்டிகள், இரண்டாம் வகுப்பு படுக்கைவசதி கொண்ட 10 பெட்டிகள், இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 2 பெட்டிகள், இரண்டாம் வகுப்பு 2 சரக்கு பெட்டிகள் உள்ளிட்ட 17 பெட்டிகள் இடம் பெற்றிருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com