எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணையில் திருத்தம்

கர்நாடக எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையில் சில திருத்தங்களை செய்து இறுதி கால அட்டவணையை

கர்நாடக எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையில் சில திருத்தங்களை செய்து இறுதி கால அட்டவணையை கர்நாடக உயர்நிலைக் கல்வி தேர்வு வாரியம் (கேஎஸ்இஇபி) வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கர்நாடக உயர்நிலைக் கல்வி தேர்வு வாரியம் நடத்தும் 2017-18-ஆம் கல்வியாண்டுக்கான கர்நாடக எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வின் வரைவு கால அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் 23 முதல் ஏப்.4-ஆம் தேதி வரை தேர்வு நடத்தத் திட்டமிட்டிருந்தது. இந்தத் தேர்வு அட்டவணை குறித்து பொதுமக்களின் கருத்தறியப்பட்டது.
மக்களின் கருத்தறிந்த பிறகு, பொதுத் தேர்வுக்கான இறுதி கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 23-ஆம் தேதி தொடங்கும் தேர்வு, ஏப்.6-ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
பொதுமக்களின் பார்வைக்காக  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பொதுத் தேர்வுக்கான இறுதி கால அட்டவணையில் குறிப்பிட்டுள்ள தேர்வு தேதியும், பாடமும் வருமாறு: 2018-ஆம் ஆண்டு மார்ச் 23(வெள்ளி)-முதல்மொழிப்பாடம்-கன்னடம், தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், உருது, ஆங்கிலம், சம்ஸ்கிருதம், மார்ச் 24(சனி)-தேர்வு இல்லை, மார்ச் 25(ஞாயிறு)-விடுமுறை, மார்ச் 26(திங்கள்)-கணிதம், மார்ச் 27(திங்கள்)-தேர்வு இல்லை, மார்ச் 28(புதன்)-இரண்டாம் மொழிப்பாடம்-ஆங்கிலம், கன்னடம், மார்ச் 29(வியாழன்)-மகாவீர்ஜெயந்திவிடுமுறை, மார்ச் 30(வெள்ளி)-புனிதவெள்ளி விடுமுறை,மார்ச் 31(சனி)-தேர்வு இல்லை, ஏப்.1(ஞாயிறு)-விடுமுறை, ஏப்.2(திங்கள்)- அறிவியல், ஏப்.3(செவ்வாய்)-தேர்வு இல்லை, ஏப்.4(புதன்)-மூன்றாம்மொழிப்பாடம்-இந்தி, கன்னடம், ஆங்கிலம், அரேபிக், பெர்ஷியன், உருது, சமஸ்கிருதம், கொங்கணி,துளு, ஏப்.5(வியாழன்)-தேர்வு இல்லை, ஏப்.6(வெள்ளி)-சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.
முதல்மொழிப்பாடம் 100 மதிப்பெண்ணுக்கும், இரண்டாம்மொழிப்பாடம், மூன்றாம்மொழிப்பாடம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் 80 மதிப்பெண்ணுக்கும் தேர்வு நடத்தப்படும். வினாத்தாள்களை மாணவர்கள் படிப்பதற்காக, தேர்வுக்கு முன்பாக 15 நிமிடங்கள் தரப்படும். இரண்டாம் மற்றும் மூன்றாம்மொழிப்பாடங்கள் இரண்டேமுக்கால் மணிநேரமும், இதர பாடங்கள் மூன்றேகால் மணி நேரமும் தேர்வு நடைபெறும். தேர்வு தினமும் காலை 9.30 மணிக்கு தொடங்குகின்றன. தேர்வு கால அட்டவணை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com