தமிழ்ச் சங்க ஆண்டு விழா இலக்கியப் போட்டிகள் தொடங்கின

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுவிழா இலக்கியப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுவிழா இலக்கியப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பெங்களூரு தமிழ்ச் சங்கம், கடந்த 67 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவ, மாணவிகளிடையே இலக்கிய ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காக ஆண்டு விழா இலக்கியப் போட்டிகளை நடத்தி வருகிறது. நிகழாண்டுக்கான போட்டிகள் பெங்களூரு தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் இலக்கியப் போட்டிகளை தொழிலதிபர் பாலசுந்தரம் தம்பதி தொடங்கிவைத்தனர். விழாவுக்கு அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர் மு.மீனாட்சிசுந்தரம், சங்கத்துணைச்செயலாளர் அமுததபண்டியன், தமிழ் பேராசிரியர்கள் பொன்.க.சுப்பிரமணியம், கிருட்டிணமூர்த்தி, கி.சு.தென்னவன், புலவர் கார்த்தியாயினி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
வருகிற டிச.17-ஆம் தேதி வரையில் ஒளவையாரின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், திருக்குறள் ஒப்பித்தல், திருக்குறளை அடி பிறழாமல் எழுதி, அதற்கு விளக்கம் அளித்தல், பெருந்தலைவர் காமராஜர் குறித்து கட்டுரை மற்றும் சொற்பொழிவுப் போட்டி, பாரதியார், பாரதிதாசன் பாடல்குறித்து கட்டுரை மற்றும் சொற்பொழிவுப் போட்டி, டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, சிலப்பதிகாரம் குறித்து சொற்பொழிவுப் போட்டி, சங்க இலக்கியங்கள் மற்றும் சுற்றுப்புறச்சூழல் குறித்து கட்டுரைப்போட்டி, திருப்பாவை, திருவெம்பாவை, திருமுறைகள், திருப்புகழ் பாடல் போட்டிகள் நடைபெற உள்ளன.
முதல்நாளான வெள்ளிக்கிழமை இப்போட்டிகளில் ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையில் பயிலும் ஏறத்தாழ 500 மாணவர்கள் கலந்து கொண்டனர். 22 பள்ளிகளில் இருந்த வந்த மாணவர்களை 22 ஆசிரியர்கள் அழைத்து வந்திருந்தனர். தமிழைத் தவிர கன்னடம், நேபாளம், இந்தி, உருது, தெலுங்கு போன்ற பிறமொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட சிறுவர்களும் கலந்து கொண்டு ஆத்திசூடியையும் திருக்குறளையும் ஒப்பித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com