அஞ்சல் தலை சேகரிப்பு ஊக்குவிப்பு திட்டம்

பள்ளி மாணவர்களிடையே அஞ்சல் தலை சேகரிப்பை ஊக்குவிக்க, தீன்தயாள் அஞ்சல் தலை சேகரிப்பு ஊக்குவிப்பு திட்டத்தை அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது.

பள்ளி மாணவர்களிடையே அஞ்சல் தலை சேகரிப்பை ஊக்குவிக்க, தீன்தயாள் அஞ்சல் தலை சேகரிப்பு ஊக்குவிப்பு திட்டத்தை அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்டுள்ள செய்தி: மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில், அஞ்சல் தலை சேகரிப்பை ஊக்குவிக்க உதவித்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அஞ்சல் தலை சேகரிப்பை பழக்கமாக்கிக் கொள்வதால், மாணவர்கள் எதிர்கொண்டிருக்கும் கல்விரீதியான அழுத்தத்தை சமாளிக்க இயலும்.
இந்த திட்டத்தின்கீழ், 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம். 2016-17-ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற இறுதித்தேர்வில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்று, அஞ்சல் தலை சேகரிப்பு வைப்புக் கணக்கு வைத்திருப்போர் அல்லது அஞ்சல் தலை சேகரிப்பு சங்கத்தில் உறுப்பினராக இருப்போர் அல்லது அஞ்சல் தலை சேகரிப்பில் ஈடுபட்டிருப்போருக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
அஞ்சல் தலை தொடர்பாக நடத்தப்படும் வினாடி-வினாவில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். இந்த திட்டத்தில் உதவித்தொகை பெற தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு அஞ்சல் துறையின் சார்பில் பல்வேறு அஞ்சல் தலை தொடர்பான செய்முறை திட்டங்கள் வழங்கப்படும்.
வினாடி-வினாவில் பங்கேற்க 2018 ஜன.7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஜனவரி மாதத்தில் வினாடி-வினா நடத்தப்படும். இதில் உதவித்தொகைக்கு தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வினாடி-வினா நடத்தப்படும் தேதி மாணவர்களுக்கு தனித்தனியே தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு  இணையதளங்களை அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com