பெங்களூரு பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

பெங்களூரு பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி திட்டத்தின் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை பெறுவதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி திட்டத்தின் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை பெறுவதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு பல்கலைக்கழகம்-தொலைதூரக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்தி: பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்குநரகத்தின் சார்பில் வழங்கப்படும் இளநிலை பட்டப்படிப்புகளான பிஏ, பிகாம், பிபிஏ, முதுநிலை பட்டப்படிப்புகளான எம்காம், எம்எஸ்சி (கணிதம்), முதுநிலை பட்டப்படிப்புகள், பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகளில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
அபராதமில்லாமல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெறுவதற்கான கடைசி தேதி டிச.30-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரூ.200 அபராதம் செலுத்தி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெற ஜன.15-ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்படுகிறது. நிறைவுசெய்யப்பட்ட விண்ணப்பங்களை செலுத்துவதற்கான கடைசி தேதி ஜன.25 ஆகும். இதில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ.550 வசூலிக்கப்படுகிறது. விண்ணப்பங்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தில் காணலாம். மேலும் விவரங்களுக்கு 080-22961261,22961262, 22961263, 22961264, 22961265, 22961266, 22961267 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com