ஹபிப்கஞ்ச்-ஹுப்பள்ளி இடையே சிறப்பு ரயில்

ஹபிப்கஞ்ச் ரயில்நிலையத்தில் இருந்து ஹுப்பள்ளி ரயில்நிலையத்துக்கு கூடுதல் கட்டணத்துடன் கூடிய சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

ஹபிப்கஞ்ச் ரயில்நிலையத்தில் இருந்து ஹுப்பள்ளி ரயில்நிலையத்துக்கு கூடுதல் கட்டணத்துடன் கூடிய சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி: விழாக்கால கூட்டநெரிசலை குறைப்பதற்காக, ஹபிப்கஞ்ச்-ஹுப்பள்ளி இடையே இயக்கப்படும் ரயில் எண்கள்: 01664/01663-ஹபிப்கஞ்ச்-ஹுப்பள்ளி சிறப்பு விரைவுரயில் 4 நடைகளுக்கு இயக்கப்படுகிறது.
ரயில் எண்: 01664-ஹபிப்கஞ்ச்-ஹுப்பள்ளி சிறப்பு விரைவுரயில் ஹபிப்கஞ்ச் ரயில்நிலையத்தில் இருந்து டிச.15-ஆம் தேதி முதல் 2018 ஜன.5-ஆம் தேதி வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு, சனிக்கிழமைகளில் இரவு 8.40 மணிக்கு ஹுப்பள்ளி ரயில்நிலையம் வந்தடையும்.
மறுமார்க்கத்தில், ரயில் எண்: 01663-ஹுப்பள்ளி-ஹபிப்கஞ்ச் சிறப்பு விரைவுரயில் ஹுப்பள்ளி ரயில்நிலையத்தில் இருந்து டிச.16-ஆம் தேதி முதல் 2018 ஜன.6-ஆம் தேதி சனிக்கிழமைகளில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு, திங்கள்கிழமைகளில் காலை 4.20 மணிக்கு ஹபிப்கஞ்ச் ரயில்நிலையம் வந்தடையும். இந்த ரயில் பெங்களூரு ஹபிப்கஞ்ச் ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஹொசங்காபாத், இடார்சி, கண்ட்வா, பூசவால், மன்மத், கோபர்காவ்ன், அகமதுநகர், தெளண்ட், புணே, சதாரா, காரத், சாங்க்லி, மீரஜ் சந்திப்பு, கடபிரபா, பெலகாவி, லோண்டா, தார்வாட் வழியாக ஹுப்பள்ளி ரயில்நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயிலில் மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட 2 பெட்டிகள், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட 10 பெட்டிகள், இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 4 பெட்டிகள், இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 2 பெட்டிகள் உள்ளிட்ட 16 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com