மங்களூரு மதக்கலவரம்: உளவுத் துறை அதிகாரிகளை கடிந்துகொண்ட முதல்வர்

மங்களூரு மதக்கலவரம் குறித்து முன்கூட்டியே தகவல் தராதது மட்டுமல்லாது, அதை தடுக்க போதிய முன்கவனம் செலுத்தாதது குறித்து உளவுத் துறை உயரதிகாரிகளை முதல்வர் சித்தராமையா கடிந்துகொண்டுள்ளார்
மங்களூரு மதக்கலவரம்: உளவுத் துறை அதிகாரிகளை கடிந்துகொண்ட முதல்வர்

மங்களூரு மதக்கலவரம் குறித்து முன்கூட்டியே தகவல் தராதது மட்டுமல்லாது, அதை தடுக்க போதிய முன்கவனம் செலுத்தாதது குறித்து உளவுத் துறை உயரதிகாரிகளை முதல்வர் சித்தராமையா கடிந்துகொண்டுள்ளார்.

இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ மக்கள் சம எண்ணிக்கையில் வாழும் தென்கன்னட மாவட்டத்தில், குறிப்பாக மங்களூரில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் மதக்கலவரம் நிகழ்ந்தது. ஆர்எஸ்எஸ் தொண்டர் சரத் மடிவாலா கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் கல்வீசி பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. கலவரத்தை அடக்க போலீஸôர் தடியடி நடத்தினர். மேலும் மங்களூரு உள்ளிட்ட தென்கன்னட மாவட்டத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, மங்களூரில் நிலைமை கட்டுக்குள் வந்தாலும், அதுகுறித்து முதல்வர் சித்தராமையாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. சட்டம்}ஒழுங்கு சீராக கடைபிடிக்கப்படவில்லை. சட்டம்}ஒழுங்கை பராமரிக்க முடியாவிட்டால் முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதைத் தொடர்ந்து, மாவட்ட பொறுப்பு அமைச்சர் ரமாநாத்ராய் தலைமையில் அமைதிக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை பாஜக, மஜத போன்ற எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. தென்கன்னட மாவட்டத்தில் மதரீதியான பதற்றம் மக்களிடையே நீடித்துவரும் நிலையில், இந்த கலவரம் குறித்து முன்கூட்டியே காவல்துறைக்கு எச்சரிக்கை வழங்காத உளவுத் துறை டிஜிபி கே.என்.ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகளை முதல்வர் சித்தராமையா கடிந்துகொண்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு வாரமாக ராய்ச்சூரு, மைசூரு, சாமராஜ்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முதல்வர் சித்தராமையா, ஞாயிற்றுக்கிழமை முற்பகல் பெங்களூருக்கு திரும்பினார். தனது காவிரி இல்லத்தில் உள்றை ஆலோசகரும், முன்னாள் ஏடிஜிபியுமான கெம்பையா, உளவுத் துறை டிஜிபி கே.என்.ரெட்டி உள்ளிட்ட உயரதிகாரிகளை சந்தித்த முதல்வர் சித்தராமையா, மங்களூரில் மதக்கலவரம் ஏற்படுவதற்கான சூழல் நிலவுவதை முன்கூட்டியே ஏன் தெரிவிக்கவில்லை என்று கடிந்துகொண்டிருக்கிறார். உளவுத் துறை சரியான தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்காததால், காவல்துறையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. கலவரம் வெடித்தபிறகும் காவல்துறை அதிகாரிகள் சரியான முடிவுகளை எடுத்து இளநிலை அதிகாரிகளை வழிகாட்ட தவறியதால் மதக்கலவரம் மூண்டது. இதுகுறித்து முன்கூட்டியே தகவல் தராவிட்டால் உளவுத் துறை இருந்தென்ன பயன்? என்று கோபித்துக்கொண்ட முதல்வர், உளவுத் துறையின் செயல்பாடுகளை முடுக்கிவிடுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், இதுபோன்ற மதக்கலவரம் நடப்பது எதிர்க்கட்சிகளுக்கு நல்ல வாய்ப்பாக இருந்துவிடும். மதக் கலவரங்களால் மக்களிடையே காவல்துறைக்கு கெட்டபெயர் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் வேறு எந்த பகுதியிலும் இனிமேலாவது மதக்கலவரம் நடக்காமல் முன்னெச்சரிக்கை வகிக்க வேண்டும். வேறுஎங்காவது மதக்கலவரம் நடந்தால் காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com