ஜூலை 21 முதல் 23 வரை பெங்களூரில் சமூக நீதி மாநாடு: அமைச்சர் எச்.சி.மகாதேவப்பா

ஜூலை 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை பெங்களூரில் சமூக நீதி மாநாடு நடைபெற உள்ளது என பொதுப்பணித் துறை அமைச்சர் எச்.சி.மகாதேவப்பா தெரிவித்தார்.

ஜூலை 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை பெங்களூரில் சமூக நீதி மாநாடு நடைபெற உள்ளது என பொதுப்பணித் துறை அமைச்சர் எச்.சி.மகாதேவப்பா தெரிவித்தார்.
 இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பெங்களூரு ஜி.கே.வி.கே. வளாகத்தில் அம்பேத்கரின் 126-ஆவது பிறந்த நாளையொட்டி, ஜூலை 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை 3 நாள்கள் சமூக நீதி மாநாடு நடைபெற உள்ளது. இதில் சர்வதேச அளவில் 83 பேச்சாளர்களும், தேசிய அளவில் 149 பேரும், மாநில அளவில் 80 பேர் உள்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.
 மாநாட்டில் அம்பேத்கரின் கொள்கைகள், தத்துவங்கள் குறித்து விவாதிக்கப்படும். சமூக நீதி மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தியை பங்கெடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். மனித உரிமைகள் குறித்து வாதாடும் மூத்த வழக்குரைஞர் மார்டின் லூதர் கிங் மாநாட்டில் பங்கேற்கிறார். மாநாட்டுக்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கி, செலவு செய்யப்பட்டுள்ளது. சமூக நீதி மாநாடு சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
 பேட்டியின் போது அமைச்சர்கள் எச்.ஆஞ்சநேயா, கிருஷ்ணேபைரே கெளடா, சமூக நலத்துறை முதன்மைச் செயலர் மணிவண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com