சட்டப் பேரவைத் தேர்தலுக்கு தயாராக வேண்டும்: காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு கர்நாடக முதல்வர் வேண்டுகோள்

எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்தார்.
சட்டப் பேரவைத் தேர்தலுக்கு தயாராக வேண்டும்: காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு கர்நாடக முதல்வர் வேண்டுகோள்

எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்தார்.

பெங்களூரு விதான செளதாவில் திங்கள்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அவர் பேசியது:
காங்கிரஸ் கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளில் எம்எல்ஏக்களை நியமிக்கவில்லை என்ற அதிருப்தி சிலருக்கு உள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.சோமசேகர் உள்பட சில எம்எல்ஏக்கள் கட்சியின் மேலிடத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஊடகங்களுக்கும் இதுதொடர்பான செய்திகளை அளித்து வருகின்றனர்.

உள்கட்சிப் பிரச்னையை வெளியே கூறாமல் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கர்நாடக அரசின் திட்டங்கள், சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும். எம்எல்ஏக்கள் உள்பட கட்சியினர் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கத் தயாராக வேண்டும். வெற்றி பெறுவதற்கான திட்டத்தை வரையறுத்துக்கொண்டு பணியாற்ற வேண்டும். அதை தவிர்த்து கவனத்தை வேறு திசைகளில் திருப்ப வேண்டாம். சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றியை மட்டுமே குறியாக வைத்துப் பாடுபட வேண்டும் என்றார் அவர்.

கூட்டத்துக்கு பின்னர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வர் செய்தியாளர்களிடம் கூறியது:
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் கட்சிப் பொறுப்புகளை எம்எல்ஏக்களுக்கு வழங்க வேண்டாம் என காங்கிரஸ் மேலிடம் அறிவுரை கூறியது. இதன்படி, பொறுப்புகள் வழங்கப்படவில்லை. இதனை எம்எல்ஏக்கள் பெரிதுபடுத்தாமல், தங்களது தொகுதிகளுக்குச் சென்று தேர்தல் பணியாற்ற வேண்டும். கட்சியின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்றார் அவர்.

கூட்டத்தில், காங்கிரஸ் மாநிலச் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ், அமைச்சர்கள் ஜெயசந்திரா, காகோடு திம்மப்பா, ஆர்.வி.தேஷ்பாண்டே, எச்.கே.பாட்டீல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com