குடியரசுத் தலைவர் இன்று உடுப்பி வருகை

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 18) உடுப்பிக்கு வருகை தரவிருக்கிறார். அதையொட்டி, உடுப்பியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 18) உடுப்பிக்கு வருகை தரவிருக்கிறார். அதையொட்டி, உடுப்பியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
  இருநாள் பயணமாக பெங்களூருக்கு சனிக்கிழமை வருகை தந்துள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பெங்களூரு மெட்ரோ ரயில் சேவையைத் தொடக்கி வைத்தார்.
 பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் சனிக்கிழமை இரவு தங்கிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஞாயிற்றுக்கிழமை காலை 9.20 மணிக்கு எச்ஏஎல் விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மங்களூருக்குப் புறப்படுகிறார். மங்களூருக்கு வருகை தரும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் உடுப்பிக்குச் சென்று கிருஷ்ணா மடத்தில் உள்ள பெஜாவர் மடத்தின் பீடாதிபதி விஸ்வேஷ தீர்த்த சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெறுகிறார். உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். பிறகு, அங்கிருந்து கார் மூலம் கொல்லூர் சென்று மூகாம்பிகை அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர், அங்கிருந்து மங்களூரு திரும்பி, புது தில்லி செல்கிறார்.
 குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு மங்களூரு, உடுப்பி, கொல்லூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிருஷ்ணர் கோயிலைச் சுற்றி 850 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com