அரசு அதிகாரியின் வீட்டில் ஊழல் ஒழிப்புப் படையினர் அதிரடி சோதனை: ரூ. 1.19 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்

அரசு அதிகாரியின் வீட்டில் அதிரடி சோதனை நடத்திய ஊழல் ஒழிப்புப் படையினர் ரூ. 1.19 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

அரசு அதிகாரியின் வீட்டில் அதிரடி சோதனை நடத்திய ஊழல் ஒழிப்புப் படையினர் ரூ. 1.19 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
 சித்ரதுர்கா மாவட்டம் செல்லுகெரேயில் பொதுப்பணித்துறை அலுவலக உதவிப் பொறியாளர் அருண்குமார். வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகளைக் குவித்துள்ளதாக எழுந்த புகாரின்பேரில், பேங்க் காலனியில் இவரது வீட்டில் ஊழல் ஒழிப்புப் படையினர் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.
 அப்போது, ரூ. 1.19 கோடி மதிப்பிலான வீட்டுமனை, நிலம் உள்ளிட்ட சொத்து ஆவணங்கள், 140 கிராம் தங்க நகை, 730 கிராம் வெள்ளிப்பொருள்கள் உள்பட கார், டிராக்டர், இருசக்கரவாகனம், ரொக்கப் பணம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. அருண்குமார் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com