கோலார் தங்கவயலில் நவீன நகரம் கட்டமைக்கப்படும்: கர்நாடக அமைச்சர் ரோஷன் பெய்க்

தங்கச் சுரங்கத்துக்கு மாநில அரசு வழங்கியிருந்த 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை சீரமைத்து, ஆந்திர மாநிலம்,

தங்கச் சுரங்கத்துக்கு மாநில அரசு வழங்கியிருந்த 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை சீரமைத்து, ஆந்திர மாநிலம், அமராவதி மாதிரியில் நவீன நகரம் உருவாக்கப்படும் என கர்நாடக நகர வளர்ச்சித் துறை அமைச்சர் ரோஷன் பெய்க் தெரிவித்தார்.
 இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 கோலார் மாவட்டம் தங்கவயலில் 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தங்கச் சுரங்கத்திற்கு மாநில அரசு வழங்கியிருந்தது. தற்போது தங்கச் சுரங்கம் மூடப்பட்டுள்ளதால், நிலத்தைத் திரும்பப்பெற்று, அதில் அமராவதி மாதிரியில் நவீன நகரம் உருவாக்கப்படும். இதற்காக சர்வதேச அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும்.
 இந்த புதிய நகரத்தில் 20 லட்சம் பேர் குடியேறி வாழ முடியும். கோலார் தங்கவயலில் ஏற்கெனவே தங்கவயலில் உள்ள 2 கோல்ப் விளையாட்டு மைதானம், 2 ஹெலிபேடுகள், 140 பாரம்பரியக் கட்டடங்கள் மேம்படுத்தப்படும்.
 பெங்களூரிலிருந்து பங்காருப்பேட்டைக்கு நேரடியாக ரயில் சேவை உள்ளதால், புதிய நகரம் உருவாக்கப்பட்டால் பொதுமக்களுக்கு அனைத்து வகைகளிலும் வசதிகள் அதிகரிக்கும். பெங்களூரில் அதிகரித்துவரும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் வகையில் பெங்களூருக்கு அருகே உள்ள தாபஸ்பேட்டை, பிடதி, நெலமங்கலா, தேவனஹள்ளி, தொட்டப்பள்ளாபூரு நகரங்களை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
 முதல்கட்டமாக தேவனஹள்ளியில் ரூ. 2,800 கோடியில் வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்படும். கடல் நீரைச் சுத்திகரித்து, பெங்களூரின் குடிநீர்த் தேவையைச் சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மைசூரில் சைக்கிள் சுற்றுலா சேவை தொடங்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com