பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு மருந்துகள் தயார்!

பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டோருக்கு மருந்துகள் தயாராக உள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டோருக்கு மருந்துகள் தயாராக உள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் 2016-ஆம் ஆண்டில் பன்றிக் காய்ச்சலுக்கு 110 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டில் 871 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகம், மார்ச் 9-ஆம் தேதி வரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் அதிகபட்சமாக 370 பேர் பாதிக்கப்பட்டு, 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிவமொக்காவில் 2 பேரும், கோலார், சிக்மகளூரு, மைசூரு ஆகிய இடங்களில் தலா ஒருவரும் இறந்துள்ளனர்.
இந்த நிலையில், நோய் மேலும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கர்நாடக அரசு எடுத்துள்ளது. இதன்படி, பெங்களூரில் நிமான்ஸ், நாராயணா நேத்ராலயா, மணிப்பால், உடுப்பியில் மணிப்பால் ஆகிய மருத்துவமனைகளில் நோய் கண்டறியும் தனி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல், மைசூரு, சிவமொக்கா, ஹுப்பள்ளி, பெல்லாரி மருத்துவக் கல்லூரிகளிலும் தனி மையங்கள் நிறுவ முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருந்துகளை தயார் நிலையில் உள்ளதாகவும், நோய் பரவாமல் தடுக்க மாவட்டத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி வழங்கப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com