6,000 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்திக்கு இலக்கு: அமைச்சர் டி.கே.சிவக்குமார்

2020-க்குள் 6 ஆயிரம் மெகா வாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக மின் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.

2020-க்குள் 6 ஆயிரம் மெகா வாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக மின் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
 கர்நாடக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை பாஜக உறுப்பினர் தாரா அனுராதாவின் கேள்விக்குப் பதிலளித்து அவர் பேசியது:
 மாநில அளவில் 110 வட்டங்களில் தலா 20 மெகா வாட் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்து, சேமித்து வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் வீணாகும் மின்சாரம் 15 சதம் தடுக்கப்படும். சூரிய ஒளி மின் உற்பத்தி மூலம் விரைவில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழாண்டு இறுதிக்குள் 2 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 பிரதமர் நரேந்திர மோடி பசுமைத் திட்டத்தின் கீழ், மாநில அரசு காற்றாலை, சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க முடிவு செய்துள்ளது. கர்நாடக மாநிலம், பாவகடா வட்டம், நாகனமடிகே பகுதியில் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட சூரிய ஒளி மின் உற்பத்தி மையம், ஜூன் 15-ஆம் தேதி தொடங்கப்படும். இதற்கான பணிகள் பாவகடா அருகே உள்ள வாளூர், ராயசல்லூர், கியாதகனசெல்லூர், களசமுத்ரா, திருமணி ஆகிய கிராமங்களில் தொடங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com