"காவலர்களுக்கு புதிதாக 11,000 வீடுகள்'

காவலர்களுக்கு புதிதாக 11 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.

காவலர்களுக்கு புதிதாக 11 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
 கர்நாடக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் உறுப்பினர் ரஃபிக் அகமதுவின் கேள்விக்குப் பதிலளித்து அவர் பேசியது:
 காவலர்களுக்கு ரூ. 272 கோடியில் 11 ஆயிரம் வீடுகள் கட்டித்தர அரசு திட்டமிட்டுள்ளது. காவலர்களுக்கு வீட்டுமனை 20-20 என்ற திட்டத்தில் 3 கட்டங்களாக கட்டித்தர முடிவு செய்யப்பட்டுள்ளது. தும்கூரில் கா
 லர்களுக்கான வீடுகள் கட்டுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
 சிவமொக்கா ஊரகம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் காவலர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் செய்துத் தர தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்படும் காவலர் குடியிருப்புகளில் உணவகம், சுகாதார நிலையங்கள், சில்லறைக் கடைகள் போன்ற வசதிகள் செய்து தரப்படும்.
 2015-16 நிதியாண்டில் காவலர் குடியிருப்புகளை சீரமைக்க ரூ. 53 லட்சம் ஒதுக்கப்பட்டது. மேலும் குடியிருப்புகளுக்குத் தேவையான குடிநீர், மின்சாரம், கழிவுநீர் சாக்கடைகள் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com