இந்திய பேனா நண்பர் பேரவையின் நட்புச் சங்கம விழா: நாமக்கல்லில் இன்று நடைபெறுகிறது

இந்தியப் பேனா நண்பர் பேரவையின் 22-ஆவது நட்புச் சங்கம விழா தமிழகத்தின் நாமக்கல் மாநகரில் மே 20-ஆம் தேதி நடக்கிறதுஎன்று இந்தியப் பேனாநண்பர் பேரவையின் தலைவர் மா.கருண் தெரிவித்தார்.

இந்தியப் பேனா நண்பர் பேரவையின் 22-ஆவது நட்புச் சங்கம விழா தமிழகத்தின் நாமக்கல் மாநகரில் மே 20-ஆம் தேதி நடக்கிறதுஎன்று இந்தியப் பேனாநண்பர் பேரவையின் தலைவர் மா.கருண் தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூருவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மும்பையைதலைமையிடமாக கொண்டுசெயல்படும் இந்தியப் பேனாநண்பர் பேரவைக்கு மும்பை தவிர, தமிழகம், கர்நாடகம், கோவா, அஸ்சாம் உள்ளிட்ட மாநிலங்கள், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் கிளைகள் அமைந்துள்ளன. அன்பு, நட்பு, மனிதநேயத்தை நோக்கமாக கொண்டுசெயல்படும் எங்கள் அமைப்பு, ஆண்டுதோறும் நட்புச்சங்கமம் என்ற பெயரில் உலக அளவிலான மாநாட்டை நடத்திவருகிறது.
2017-ஆம் ஆண்டுக்கான 22-ஆவது நட்புச்சங்கமம், மே 20-ஆம் தேதி நாமக்கல் மாநகரில் பேருந்துநிலையம் அருகேயுள்ள பாவலர் முத்துசுவாமி மன்றத்தில் காலை 8 மணிமுதல் நடக்கவிருக்கிறது. இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். அன்று காலை 8 மணிக்கு பேருந்துநிலையத்தில் இருந்து நகரின் பல்வேறு சாலைகள் வழியாக சென்று மன்ற வளாகம் வரை செல்லும் அன்பு, நட்பு,மனிதநேயம், தீண்டாமை ஒழிப்பு, சமூகநல்லிணக்கத்தை வலியுறுத்தும் அமைதி பேரணி நடக்கவிருக்கிறது. இதை நாமக்கல் மாவட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் பொன்.தாமரைச்செல்வன் தொடக்கிவைக்கிறார். காலை 10 மணி முதல் நண்பர்கள் அறிமுகம், கலந்துரையாடல்நிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை 6 மணிக்கு 22-ஆம் ஆண்டு சிறப்புமலர் வெளியிடப்படுகிறது. சிறப்புமலரை கொ.வெ.கணேசன் வெளியிட உழவன் எம்.தங்கவேலு பெற்றுக்கொள்கிறார்.
இந்தவிழாவில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது. ஆதரவற்றோர், மனநலம் குன்றியோர், முதியோர் இல்லங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது என்றார் அவர். பேட்டியின்போது பேரவை செயலாளர் ஜான்கென்னடி, கர்நாடகமாநில அமைப்பாளர் எஸ்.சிவக்குமார், உறுப்பினர்கள் ஜேசுதாஸ், ராமசந்திரன், கிப்சன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com