தென்னை நார் அலங்காரப் பயிற்சி

பெங்களூரில் சனிக்கிழமை தென்னை நார் அலங்காரப் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

பெங்களூரில் சனிக்கிழமை தென்னை நார் அலங்காரப் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தோட்டக்கலைத் துறை சார்பில் பெங்களூரு லால் பாக் பூங்காவில் உள்ள எம்.எச்.மரிகெளடா நினைவு அரங்கத்தில் மே 19-ஆம் தேதி (சனிக்கிழமை) தென்னை நார் அலங்காரப் பயிற்சி முகாம் நண்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கவிருக்கிறது.  இந்த முகாமில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் நேரில் வரலாம். மேலும் விவரங்களுக்கு 080-  26576781, 9845803474 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் தேவெ கெளட பெயரில் அப்பாஜி உணவகம்
பெங்களூரு, மே 19:  கர்நாடகத்தில் முன்னாள் பிரதமர் தேவெ கெளட பெயரில் அப்பாஜி உணவகம் தொடங்கப்படும் என்று சட்ட மேலவை உறுப்பினர் டி.ஏ.சரவணா தெரிவித்தார்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவைச் சந்தித்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கர்நாடகத்தில் உள்ள 224 தொகுதிகளிலும் முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவின் பெயரில் அப்பாஜி உணவகம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் உணவகத்தை பசவனகுடி தொகுதியில் தொடங்கப்படும். பின்னர் இதனை படிப்படியாக பெங்களூரில் உள்ள அனைத்து சட்டப்பேரவையிலும் தொடங்கப்படும். விவசாயிகளிடமிருந்து நேரடியாக உணவுப் பொருளை வாங்கி, ரூ. 5 என்ற விலையில் இட்லி, வடை, காபி விற்பனை செய்யப்படும்.
மதிய உணவு ரூ. 10 என்ற விலையில் வழங்கப்படும். அதிகாலை 5 மணிமுதல் மாலை 4 மணி வரை இந்த உணவகங்கள் திறந்திருக்கும். தேவெ கெளடரின் பெயரில் மக்களுக்கு குறைந்த விலையில் ருசியான உணவுகளை வழங்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாகும். இதனால் ஏழைகள் பயனடைவார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com