நாளை சைகை மொழி பயிற்சி முகாம்

பெங்களூரில் மே 21-ஆ தேதி முதல் சைகை மொழி பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

பெங்களூரில் மே 21-ஆ தேதி முதல் சைகை மொழி பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காது கேளாதோரின் நலன்களுக்காக 1999-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதுதான் எனேபிள் இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம். லாப நோக்கின்றி செயல்படும் இந்நிறுவனம், காதுகேளாதோரின் கல்விப் பணிகளுக்காக சைகைமொழிகளைத் கற்றுத்தரும் பணியில் 2016-ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவில் காது கேளாதோருடன் பேச தேவைப்படும் சைகைமொழியைக் கற்றறிந்தவர்கள் 7 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ள எனேபிள் இந்தியா, பெங்களூரு மெட்ரோ ரயில்கழகத்தின் துணை அமைப்பான ரங்கோலி மெட்ரோ கலைமையத்தின் ஆதரவுடன் பெங்களூரில் மாதந்தோறும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் சைகைமொழி பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இதன்முதல் பயிற்சி முகாம் வருகிற மே 21-ஆம் தேதி பெங்களூரு, மகாத்மா காந்தி சாலையில் உள்ள ரங்கஸ்தலா அரங்கில் நடக்கவிருக்கிறது. இந்த பயிற்சி முகாமில் பங்கேற்க ஆர்வமுள்ளோரை வரவேற்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com