சமூக நலத்துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் ஆஞ்சநேயா

சமூக நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என மாநில சமூக நலத்துறை அமைச்சர் எச்.ஆஞ்சநேயா தெரிவித்தார்.

சமூக நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என மாநில சமூக நலத்துறை அமைச்சர் எச்.ஆஞ்சநேயா தெரிவித்தார்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மாநில அளவில் சமூக நலத்துறை மற்றும் அதன் கீழ் இயங்கும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட துறைகளில் 22,308 பணியிடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள பணியிடங்களை விரைவாக நிரப்ப முடிவு செய்துள்ளோம்.
இதனால் வேலையில்லாமல் உள்ள பல இளைஞர்கள் பயனடைவார்கள். சமூக நலத்துறையில் மாவட்ட, வட்ட அளவிலான அதிகாரிகள், உண்டு உறைவிடப் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான பணியிடங்கள் கர்நாடக பொதுச் சேவை ஆணையத்தின் வாயிலாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். சமையலர்கள், உதவியாளர்கள், காவலர்கள், கடைநிலை ஊழியர்கள் ஆட்சியர், மாவட்ட பஞ்சாயத்து பொது செயலர் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் பணி வழங்கப்படும். இதில் எந்த பாராபட்சமும் இன்றி தகுதியுள்ளவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
கர்நாடக உண்டு உறைவிடப் பள்ளிகளில் 15,380 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. அதில் 4,226 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. நிகழாண்டு 4,122 பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்துள்ளோம்.
மேலும் நிகழாண்டு புதிதாக தொடங்கப்படும் உண்டு, உறைவிடப் பள்ளிகளுக்கு 13,205 பணியிடங்கள் நிரப்பும் பணி தொடங்கியுள்ளது. மேலும் சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தையும் விரைவில் நிரப்ப முடிவு செய்து பணியாற்றி வருகிறோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com