கல்வித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு

கல்வித் துறையில் தனியாரின் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

கல்வித் துறையில் தனியாரின் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
 பெங்களூரில் எம்.எஸ். ராமையாவின் உருவச் சிலையை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து, வெங்கய்ய நாயுடு பேசியது:-
 பல்வேறு துறைகளில் வெளிநாடுகளிலிருந்து முதலீடு செய்யப்படுகிறது. கல்வித்துறையிலும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் முதலீடு செய்வதில் தவறில்லை.
 சிறந்த கல்வியை கொடுப்பதில் தனியார் சிறந்து விளங்குவதால், தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும். தனியார் தவறு செய்தால், அவர்களை தண்டிப்பது அரசின் கடமை. அதற்காக தனியாரின் பங்களிப்பு முற்றிலுமாக ஒதுக்க முடியாது.
 கல்வி, சுகாதாரத் துறையில் எம்.எஸ்.ராமையா குழுமத்தின் பங்களிப்பு அபாரமாக உள்ளது. சமூகத்திலிருந்து பெற்றதை, சமூகத்துக்கே திருப்பி அளிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை கொண்டிருந்தவர் எம்.எஸ்.ராமையா. அவரது உருவச்சிலையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி.
 யாராக இருந்தாலும், நமது கலாசாரத்தை பின்பற்றி தாய், பிறந்த மண், ஊர், தாய் மொழி ஆகியவற்றை மறக்காமல் பெருமை சேர்க்க வேண்டும்.
 சாதனையாளர்களை கல்வி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். கடுமையான உழைப்பால் பலர் சாதனையாளர்களாக மாறியுள்ளனர். நாட்டின் வளர்ச்சிக்கு சாதனையாளர்களின் பங்களிப்பு அவசியம். நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அனைவரும் ஒற்றுமையாக உழைக்க வேண்டும் என்றார்.
 நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் கிரண் குமார், அமைச்சர்கள் பசவராஜராய ரெட்டி, சரணபிரகாஷ் பாட்டீல், கோகுலா கல்வி குழுமத் தலைவர் எம்.ஆர்.ஜெயராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com