காங்கிரஸில் சேர உதவியவர்களை சித்தராமையா மறந்துவிட்டார்: எச்.விஸ்வநாத்

காங்கிரஸில் சேர உதவியவர்களை முதல்வர் சித்தராமையா மறந்துவிட்டார் என்று அந்தக் கட்சியின் முன்னாள் எம்பி எச்.விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸில் சேர உதவியவர்களை முதல்வர் சித்தராமையா மறந்துவிட்டார் என்று அந்தக் கட்சியின் முன்னாள் எம்பி எச்.விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
 மஜதவிலிருந்து விலகி, காங்கிரஸில் இணைய மூத்த தலைவர் அகமது படேல் உதவினார் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளது முற்றிலும் தவறான தகவலாகும்.
 மஜதவிலிருந்து சித்தராமையா விலக முடிவு செய்த பின்னர், காங்கிரஸில் இணைவது குறித்து முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
 அப்போது ஊடகத்தினர் கேட்டதற்கு, "பல்வலிக்கு சிகிச்சை எடுக்க மகாராஷ்டிரம் சென்று வந்தேன்' என்றார். பின்னர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசினார்.
 காங்கிரஸில் சித்தராமையா சேருவதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து டி.கே.சிவக்குமார். பி.எல்.சங்கர் ஆகியோர் மேலிடத்துக்கு கடிதம் எழுதினர். பின்னர், அவர்கள் இருவரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும் நேரில் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.
 இதைத் தொடர்ந்து, ஜாபர் ஷெரீப்பை சித்தராமையா சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் காங்கிரஸில் இணைந்து சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட சித்தராமையா 200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது காங்கிரஸில் சேர உதவியவர்களை மறந்து, அவர்களை கட்சியிலிருந்து நீக்க திட்டமிட்டு சித்தராமையா முயற்சித்துவருவது வேதனையளிக்கிறது என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com