கர்நாடக பொது நுழைவுத் தேர்வு: கால அட்டவணை வெளியீடு

கர்நாடக பொது நுழைவுத் தேர்வுக்கான காலஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2018-19-ஆம் கல்வியாண்டில் பொறியியல், தொழில்நுட்பம், பண்ணை அறிவியல்

கர்நாடக பொது நுழைவுத் தேர்வுக்கான காலஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2018-19-ஆம் கல்வியாண்டில் பொறியியல், தொழில்நுட்பம், பண்ணை அறிவியல், பி.எஸ்.சி.( விவசாயம், வேளாண்தொழில்நுட்பம், வேளாண் சந்தைபடுத்தல், கூட்டுறவு, மனை அறிவியல், பட்டுவளர்ப்பு, காடுவளர்ப்பு, தோட்டக்கலை,பி.வி.எஸ்சி(கால்நடை), பி.டெக்(வேளாண் பொறியியல், உணவுத் தொழில்நுட்பம், பால்பண்ணை தொழில்நுட்பம், மீன்வளம், உணவு அறிவியல்) பி.ஃபார்ம், டி.ஃபார்ம், ஆயுஷ்(ஆயுர்வேதம்,ஹோமியோபதி, யுனானி, நேச்சுரோபதி, யோகா) ஆகிய படிப்புகளை வழங்கும் கல்லூரிகளில் சேருவதற்காக மாணவர்களை தெரிவு செய்வதற்கு கர்நாடக தேர்வு ஆணையம் கர்நாடக பொதுநுழைவுத் தேர்வுகளை நடத்திவருகிறது.
இந்தத் தேர்வுக்கான கால அட்டவணை: ஏப்.18-இல் காலை 10.30 மணி முதல் காலை 11.50 மணி வரை உயிரியல், அன்று பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 3.50 மணி வரை கணிதம், ஏப்.19-இல் காலை 10.30 மணி முதல் காலை 11.50 மணி வரை இயற்பியல், அன்று பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 3.50 மணி வரை வேதியியல்.
வெளி மாநில மற்றும் எல்லைப்பகுதி கன்னடர்களுக்காக ஏப்.20-ஆம் தேதி காலை 11.30 முதல் நண்பகல் 12.30 மணிவரை கன்னட மொழி பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது. உயிரியல், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கு தலா 60 மதிப்பெண்களும், கன்னட மொழிக்கு 50 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்திற்கான கல்லூரிகளில் சேர விரும்புவோர் சிபிஎஸ்இ நடத்தும் பொதுநுழைவுத் தேர்வை எழுத வேண்டும். கட்டடக்கலை பட்டப் படிப்பில் சேர விரும்புவோர் கூட்டுநுழைவுத் தேர்வில்(ஜேஇஇ) இரண்டாம்தாள் அல்லது தேசிய கட்டடக்கலை திறனறித் தேர்வை எழுத வேண்டும். மேலும் விவரங்களுக்கு என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com