2018-ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு

கர்நாடக அரசின் 2018-ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

கர்நாடக அரசின் 2018-ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
2018-ஆம் ஆண்டுக்கான பொதுவிடுமுறைகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறைகளின் பட்டியலை மாநில அரசு அறிவித்துள்ளது. 2-ஆவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இல்லாமல், ஆண்டின் 23 நாள்களுக்கு மட்டுமே கர்நாடக அரசு அலுவலகங்கள் மூடப்பட்டிருக்கும்.
ஞாயிற்றுக்கிழமையில் வருவதால் சந்திரமன உகாதி (மார்ச் 18), 2-ஆவது சனிக்கிழமை வருவதால் அம்பேத்கர் பிறந்த நாள்(ஏப்.14) விடுமுறைகள் பட்டியலில் இடம்பெறவில்லை.
இதுதவிர, 17 கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறைகளையும் மாநில அரசு அறிவித்துள்ளது. இதில் ஏதாவது 2 நாள்களை அரசு ஊழியர்கள் விடுமுறையாக எடுத்துக்கொள்ளலாம். கல்வித் துறைக்கு தனி விடுமுறை பட்டியல் வெளியிடப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

1) 15.01.2018 திங்கள் சங்கிராந்தி பண்டிகை
2) 26.01.2018 வெள்ளி குடியரசுத் தினம்
3) 13.02.2018 செவ்வாய் சிவராத்திரி
4) 29.03.2018 வியாழன் மகாவீர் பிறந்த நாள்
5) 30.03.2018 வெள்ளி புனிதவெள்ளி
6) 18.04.2018 புதன் பசவண்ணர் பிறந்தநாள்
7) 01.05.2018 செவ்வாய் மே தினம்
8) 16.06.2018 சனி புனித ரமலான்
9) 15.08.2018 புதன் விடுதலை நாள்
10) 22.08.2018 புதன் பக்ரீத்
11) 13.09.2018 வியாழன் விநாயகர் சதுர்த்தி
12) 21.09.2018 வெள்ளி மொகரம்
13) 02.10.2018 செவ்வாய் காந்தி பிறந்த நாள்
14) 08.10.2018 திங்கள் மஹாலய அமாவாசை
15) 18.10.2018 வியாழன் ஆயுதபூஜை
16) 19.10.2018 வெள்ளி விஜயதசமி
17) 24.10.2018 புதன் வால்மீகி ஜயந்தி
18) 01.11.2018 வியாழன் கர்நாடக உதயதினம்
19) 06.11.2018 செவ்வாய் நரக சதுர்தசி
20) 08.11.2018 வியாழன் பலிபாட்யமி, தீபாவளி
21) 21.11.2018 புதன் மிலாதுநபி
22) 26.11.2018 திங்கள் கனகதாசர் பிறந்தநாள்
23. 25.12.2018 செவ்வாய் கிறிஸ்துமஸ்

கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை நாள்கள்

1) 01.01.2018 திங்கள் ஆங்கில புத்தாண்டு
2) 01.03.2018 வியாழன் ஹோலி
3) 22.03.2018 வியாழன் தேவர தாசிமையா ஜயந்தி
4) 31.03.2018 சனி ஹோலி சனிக்கிழமை
5) 20.04.2018 வெள்ளி சங்கராச்சார்யா பிறந்த நாள்
6) 21.04.2018 சனி ராமானுஜச்சார்யா பிறந்த நாள்
7) 02.05.2018 புதன் ஷப்-இ-பிராத்
8) 12.06.2018 செவ்வாய் ஷப்-இ-கைதர்
9) 15.06.2018 வெள்ளி ஜும்மத்துல்-விதா
10) 24.08.2018 வெள்ளி ஸ்ரீவரமகாலட்சுமி விரதம், திருஓணம்
11) 25.08.2018 சனி ரிக்-உபகர்மா
12) 27.08.2018 திங்கள் பிரம்ம ஸ்ரீநாராயணகுரு ஜயந்தி
13) 12.09.2018 புதன் ஸ்வர்ணகெளரி விரதம்
14) 17.09.2018 திங்கள் விஸ்வகர்ம ஜயந்தி கன்யா மரியம்மா ஜயந்தி
15) 23.11.2018 வெள்ளி குருநானக் ஜயந்தி
16) 24.11.2018 சனி ஹுத்தரி திருவிழா
17) 24.12.2018 திங்கள் கிறிஸ்துமஸ் முன்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com