"ஏழை சிறுவர்களை விளையாட்டில் ஊக்குவிக்க வேண்டும்'

கால்பந்து, ஹாக்கி, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் ஏழை சிறுவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று இந்தியாவுக்கான ஜப்பான் நாட்டுத் துணைத் தூதர் டாகாயுகி கிடாகவா தெரிவித்தார்.

கால்பந்து, ஹாக்கி, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் ஏழை சிறுவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று இந்தியாவுக்கான ஜப்பான் நாட்டுத் துணைத் தூதர் டாகாயுகி கிடாகவா தெரிவித்தார்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை ஒய்.கே.கே, ரியல் மேட்ரிட் அறக்கட்டளை சார்பில் வறுமைக்கோட்டிற்கு கீழே வசிக்கும் 280 சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு நவ.10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை இலவசமாக கால்பந்து பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சியில் அவர் பேசியது:
நாட்டிற்கு பெருமை சேர்ப்பதில் விளையாட்டுகளுக்கு பெரும் பங்கு உள்ளது. சர்வதேச அளவில் கால்பந்து விளையாட்டிற்கு அதிக அளவில் வரவேற்பு உள்ளது. ஆனால், ஏழை சிறுவர்கள் சர்வதேச விளையாட்டில் பங்கேற்பது சிரமமாக உள்ளது.
இதை கவனத்தில் கொண்டு ஒய்.கே.கே, ரியல் மேட்ரிட் அறக்கட்டளை சார்பில் பெங்களூரில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் 280 சிறுவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு இலவசமாக கால்பந்து பயிற்சி அளிக்க முன் வந்துள்ளது. ஏழை சிறுவர்களை கல்வியில் மட்டுமன்றி, விளையாட்டிலும் ஊக்குவிப்பது அவசியம் என்றார். நிகழ்ச்சியில் ஒய்.கே.கே ஹோல்டிங் ஆசிய நிறுவனத்தின் தலைவர் கோசுகே மிலிமி, ரியல் மேட்ரிட் மேலாளர் அன்டெனர் போராஜோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com