பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கோரி அரசு ஊழியர்கள் பேரணி

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி மாநில சிறுபான்மை, பிற்படுத்தப்பட்டோர், பொதுப் பிரிவு சங்க(அஹிம்சா) அரசு ஊழியர்கள்

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி மாநில சிறுபான்மை, பிற்படுத்தப்பட்டோர், பொதுப் பிரிவு சங்க(அஹிம்சா) அரசு ஊழியர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திலிருந்து சுதந்திரப் பூங்கா வரை வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரணியில், அஹிம்சா சங்க பொதுச் செயலாளர் எம்.நாகராஜ் பேசியது:
சிறுபான்மை, பிற்படுத்தட்டோர், பொதுப்பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதை மாநில அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். நவ. 13-ஆம் தேதி பெலகாவியில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் இட ஒதுக்கீட்டிற்கான சட்ட மசோதாவை திருத்தம் செய்து, அனைவருக்கும் சமூகநீதி கிடைக்க வழி செய்ய வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாமல் காலம் கடத்தினால், மாநில அரசைக் கண்டித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாவிட்டால் 9 லட்சம் அரசு ஊழியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்றார்.
பேரணியையொட்டி விதான செளதா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பேரணியின் முடிவில் பெங்களூரு வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜிடம் தங்கள் கோரிக்கை மனுவை சங்கத்தின் மூத்த நிர்வாகிகள் வழங்கினர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com