பி.எஸ்.என்.எல். செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை

பி.எஸ்.என்.எல். செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பி.எஸ்.என்.எல். செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கர்நாடக தொலைதொடர்பு வட்டத்தின் தலைமை பொதுமேலாளர் ஆர்.மணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவைகளை வழங்குவதில் முன்னோடியாக இருந்துவருகிறது. இதுதவிர பல்வேறு சலுகைகளையும் அளித்துவந்துள்ளது.
அடுத்தக்கட்டமாக பின்-தொகை செலுத்து (போஸ்ட்பெய்ட்) செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு செல்லிடப்பேசி சேவைகளில் 60 சத கட்டண தள்ளுபடிகளை வழங்கும் 'லூட் லோ' திட்டத்தை அறிவிக்கிறது.
இந்தத் திட்டத்தில் ரூ.225, ரூ.325, ரூ.525, ரூ.725, ரூ.799, ரூ.1125, ரூ.1525 பின்-தொகை செலுத்து செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு நவ.1-ஆம் தேதி முதல் புதிய கட்டணச் சலுகை அமல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின்கீழ் அனைத்து வகையான பின்-தொகை செலுத்து செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கும் நவ.1-ஆம் தேதி முதல் 500 சத கூடுதல் இலவச இணையதரவு(டேட்டா யூசேஜ்)வழங்க திட்டமிட்டுள்ளது.
அனைத்து பின்-தொகை செலுத்து செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கும் நிரந்தர மாதக் கட்டணமாக ரூ.99, ரூ.149, ரூ.225, ரூ.325, ரூ.525, ரூ.725, ரூ.799, ரூ.1125, ரூ.1525 செலுத்துவோருக்கு முறையே 500எம்பி, 500எம்பி, 3ஜிபி, 7ஜிபி, 15ஜிபி, 30ஜிபி, 90ஜிபி இணையதரவு எவ்வித வேகக்கட்டுப்பாடும் இல்லாமல் வழங்கப்படுகிறது.
இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு  இணையதளத்தை அணுகலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com