பெலகாவியில் இன்று மஜத சார்பில் விவசாயிகள் மாநாடு

மஜத சார்பில் விவசாயிகள் மாநாடு பெலகாவியில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 14)  நடைபெற உள்ளது.

மஜத சார்பில் விவசாயிகள் மாநாடு பெலகாவியில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 14)  நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக பெலகாவி மாவட்ட மஜத தலைவர் சங்கர் மாண்டோகி திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
 பாஜக,  காங்கிரஸ் ஆட்சிகளில் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  இதனை தடுக்க அரசுகள் முன்வரவில்லை.  இதனை கண்டித்து  பெலகாவியில் மஜத சார்பில் விவசாயிகள் மாநாடு செவ்வாய்க்கிழமைநடைபெற உள்ளது.
இதில் மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவெ கெளடா,  முன்னாள் முதல்வரும்,  மஜத மாநிலத் தலைவருமான குமாரசாமி,  கட்சியின் முன்னணித் தலைவர்கள் பசராஜ ஹொரட்டி,  பி.ஜி.ஆர். சிந்தியா உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.  மாநாட்டில் 50  ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
வட கர்நாடகத்தை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து புறக்கணித்துவருவது உள்பட பல்வேறு பிரச்னைகளையும் மாநாட்டில் விவாதிக்கப்படும். இதுதவிர,   மாநாட்டில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த  பலரும் மஜதவில் இணையும் நிகழ்ச்சி நடக்கிறது.   மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு,  மாநில கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com