"ஒப்பந்ததாரர்களுக்கு அழுத்தம் தரக் கூடாது'

ஒப்பந்ததாரர்கள் மீது அழுத்தம் தருவதை அரசியல்வாதிகள் கைவிட வேண்டும் என்றார் கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ்ஷெட்டர்.

ஒப்பந்ததாரர்கள் மீது அழுத்தம் தருவதை அரசியல்வாதிகள் கைவிட வேண்டும் என்றார் கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ்ஷெட்டர்.
பெங்களூரு அரண்மனைத் திடலில் புதன்கிழமை மாநில ஒப்பந்ததாரர் சங்க மாநாட்டின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது:
தேசிய அளவில் அடிப்படை கட்டுமானப் பணிகளில் தூணாக விளங்குபவர்கள் ஒப்பந்ததாரர்கள். அவர்கள் மீது அரசியல்வாதிகள் அழுத்தம் தருவதால், பல நேரங்களில் கட்டுமானப் பணிகள் தரமற்றதாகிவிடுகின்றன. இதற்கு ஒப்பந்ததார்களை மட்டுமே குறைகூறுவதை ஏற்க முடியாது.
ஆட்சியில், அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அதன் மூலம் மட்டுமே முறைகேடு இல்லாத கட்டுமானப் பணிகள் செய்வது சாத்தியமாகும் என்றார்.
வீட்டு வசதித் துறை அமைச்சர் எம்.கிருஷ்ணப்பா பேசியது: ஒப்பந்ததாரர் சங்க மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானங்களை பரிசீலித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். ஒப்பந்ததாரர்கள் பல்வேறு சவால்களையும், பிரச்னைகளை எதிர்கொள்வதை உணர்ந்தவன் என்ற முறையில் அவர்களின் பிரச்னைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் சித்தராமையாவிடம் வலியுறுத்துவேன் என்றார்.
நிகழ்ச்சியில் மேயர் சம்பத்ராஜ், மாநில ஒப்பந்ததாரர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணா ரெட்டி, துணைத் தலைவர் ரவீந்திரா, செயலாளர் கெம்பண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com