சிற்பக் கலை கண்காட்சி: விண்ணப்பிக்க கால அவகாசம்

பெங்களூரில் நடக்கவிருக்கும் சிற்பக்கலை கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் சிற்பிகள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் நடக்கவிருக்கும் சிற்பக்கலை கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் சிற்பிகள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக சிற்பக்கலை அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கர்நாடக சிற்பக்கலை அகாதெமி சார்பில் ஆண்டுதோறும் மரபு மற்றும் தற்கால சிற்பக்கலை கண்காட்சியை நடத்திவருகிறது. இந்த கண்காட்சியில் சிற்பிகளின் சிற்பக்கலைகள் காட்சிக்கு வைக்கப்படுவதுவழக்கம். இந்த கண்காட்சியில் பங்கேற்று தங்கள் சிற்பங்களை காட்சிப்படுத்த விரும்பும் சிற்பிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கண்காட்சியில் இடம்பெறக்கூடிய சிற்பம், உலோகம், மரம்,கல், கலவைகளான 2 அடி உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். கண்காட்சியில் பங்கேற்கும் சிறந்த 6 சிற்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.
இக்கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் சிற்பி கர்நாடகத்தைச் சேர்ந்தவராகவோ, 5 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகத்தில் குடியேறியவராகவோ, 18 முதல் 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
சிற்பங்கள் குறித்த விவரங்களுடன் விண்ணப்பங்களை அக்.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பிக்கும் காலக்கெடு அக்.23-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை பெங்களூரு, ஜே.சி.சாலை, கன்னடமாளிகையில் அமைந்துள்ள அகாதெமியின் அலுவலகத்தில் நேரடியாக வழங்க வேண்டும். நுழைவுக்கட்டணமாக ரூ.300வசூலிக்கப்படும். விண்ணப்பப்படிவங்களை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது ‌w‌w‌w.‌k​a‌r‌n​a‌t​a‌k​a‌s‌h‌i‌l‌p​a‌k​a‌l​a​a‌v​a‌d‌e‌m‌y.‌o‌r‌g என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 080-22278725 என்ற தொலைபேசியை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com