சிற்றிதழ்களின் வளர்ச்சிக்கு அரசு உதவும்: அமைச்சர் ஆஞ்சநேயா

சிற்றிதழ்களின் வளர்ச்சிக்கு அரசு உதவும் என கர்நாடக  சமூக நலத் துறை அமைச்சர் எச்.ஆஞ்சநேயா தெரிவித்தார்.

சிற்றிதழ்களின் வளர்ச்சிக்கு அரசு உதவும் என கர்நாடக  சமூக நலத் துறை அமைச்சர் எச்.ஆஞ்சநேயா தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் இதழாளர்கள் சங்கத்தின் சார்பில் பெங்களூரில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சங்கத் தலைவர் எம்.எஸ்.மணி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் எச்.எம்.ரேவண்ணா, சமூக நலத் துறை அமைச்சர் எச்.ஆஞ்சநேயா ஆகியோர் பல்துறை சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தனர்.
அம்பேத்கர் விருது ஐ.எச்.சங்கமதேவாவுக்கு, வி.பி.சிங் விருது என்.லட்சுமிநாராயணாவுக்கு, பி.பி.மண்டல்விருது ஆர்.எச்.நடராஜுக்கு, நாராயண குரு விருது டி.எச்.கம்பளிக்கு, பெரியார்விருது பி.என்.ரமேஷுக்கு, தேவராஜ் அர்ஸ் விருது கொ.ந.மஞ்சுநாத்துக்கு வழங்கப்பட்டது.
காமராஜர் விருது ஜி.ஆர்.முனிவீரண்ணாவுக்கு, எல்.ஜி.ஹாவனூர் விருது நீலகண்டாவுக்கு, டி.மரியப்பா விருது ஜி.நி.புருஷோத்தமுக்கு, டிவிஜி விருது கே.எஸ்.சோமசேகருக்கு, கே.ஏ.நெட்டகலப்பா விருது ஜெயகுமாருக்கு, சந்திரசேகர் கம்பாரா விருது ஜி.இந்திரகுமாரிக்கு, டி.நாகராஜ் விருது கே.எச்.சிவராஜூக்கு, ஸ்ரீதர் ஆச்சார் விருது எம்.எம்.சுவாமிக்கு, பா.சு.மணி விருது இ.புருஷோத்தமுக்கு, நந்தனார் விருது கேஷவவிட்லாவுக்கு, செல்லையாநாடார் விருது மெளனேஷ்விஸ்வகர்மாவுக்கு வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய அமைச்சர் எச்.எம்.ரேவண்ணா: அண்மைக்காலமாக ஊடகத் துறையில் பிற்படுத்தப்பட்டோர் அதிகளவில் பங்காற்றி வருகிறார்கள். இதுபோன்றதொரு வளர்ச்சி அனைத்து துறைகளிலும் நிகழ வேண்டும். பிற்படுத்தப்பட்டோருக்கு மாநில அரசு வழங்கும் நலத் திட்டங்களை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய ஊடகங்கள் பாலமாக இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மாநில அரசு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என்றார்.
அமைச்சர் எச்.ஆஞ்சநேயா பேசியது: தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பத்திரிகையாளர்களை போல பிற்படுத்தப்பட்டசமுதாய பத்திரிகையாளர்களுக்கு எழுது பொருள்கள், பை அடங்கிய பரிசுப்பொருள் நவம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும்.
மாநில அளவிலான பெரிய பத்திரிகைகளைக் காட்டிலும், கிராமப்புறங்கள், சிற்றூர்களைச் சென்றடையும் சிற்றிதழ்கள் அதிகளவில் பெருக வேண்டும். அப்போதுதான் ஊடகத் துறையின் வீச்சு மேலும் பரவலாகும் என்றார். முடிவில் சங்கத்தின் பெங்களூரு நகர மாவட்டத் தலைவர் கே.சீனிவாஸ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com