"பாஜகவின் குற்றச்சாட்டுகள்  ஆதாரமற்றவை'

எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாஜக தெரிவித்து வருவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாஜக தெரிவித்து வருவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரு, கிருஷ்ணா அரசு இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
பெங்களூருக்கு அருகே பூபசந்திரா கிராமத்தில் மாநில அரசு ஏற்கெனவே கையகப்படுத்திய ரூ.300 கோடி மதிப்புள்ள நிலத்தை விடுவித்து உத்தரவிட்டுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது அடிப்படை ஆதாரமற்றதாகும். உண்மைகளை மறைத்து, அரசியல் நோக்கத்தோடு குற்றம்சாட்டியுள்ளனர்.
 எனது அரசியல் செல்வாக்கு மற்றும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக பாஜகவினர் பொய்யை உண்மையை போல கூறி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் பாஜக பிற்படுத்தப்பட்டோர் அணித் தலைவர் பி.ஜே.புட்டசாமிக்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்து ஆலோசித்து வருகிறேன்.
இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மூலம் பாஜக அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது. அடிப்படை ஆதாரமற்ற இக் குற்றச்சாட்டை மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள். நான் முதல்வராகப் பதவியேற்றபிறகு எந்தவொரு நிலத்தையும் விடுவித்து உத்தரவிடவில்லை. நிலவிடுவிப்பு சம்பந்தமான மனுவில் நான்,'பரிசீலித்து, விவாதியுங்கள்' என்று எழுதியுள்ளதால் என்மீது பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ வசந்த்பங்காரா, நான்கு வருவாய் நிலங்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக கொடுத்த கோரிக்கை மனுவில் 'பரிசீலித்து, விவாதியுங்கள்' என்று எழுதியிருந்தேன்.
என்னை சந்தித்து யாராவது மனு அளித்தால், அந்த சமயத்தில் என்னிடம் எல்லா தகவல்களும் இருக்காது என்பதால் அம்மனு மீது 'பரிசீலித்து, விவாதியுங்கள்' என்று அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்குவது இயல்பானது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com