பெங்களூரு-காமாக்கிய இடையே சிறப்பு ரயில் சேவை

கூட்டநெரிசலை குறைப்பதற்காக பெங்களூரில் இருந்து காமாக்கியாவுக்கு சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது.

கூட்டநெரிசலை குறைப்பதற்காக பெங்களூரில் இருந்து காமாக்கியாவுக்கு சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி: கூட்ட நெரிசலை குறைப்பதற்காக பெங்களூரு (யஷ்வந்த்பூர்)-காமாக்கியா இடையே குளிரூட்டப்பட்ட அதிவிரைவு ரயில் ஒருநடைக்கு மட்டும் இயக்கப்படுகிறது.
ரயில் எண்:02551-பெங்களூரு ((யஷ்வந்த்பூர்-காமாக்கியா அதிவிரைவு ரயில் அக்.14-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு பெங்களூரு (யஷ்வந்த்பூர்) ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு, அக்.16-ஆம் தேதி நண்பகல் 2 மணிக்கு காமாக்கியா ரயில்நிலையம் சென்றடையும்.
இந்த ரயில் ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல், கூடூர், விஜயவாடா, சாமல்கோட், விஜயநகரம், பெர்ஹம்பூர், குர்தாசாலை, புவனேஸ்வர், கட்டக், பாலசோர், ஹிஜிலி, மிட்னாப்பூர், பங்குரா, அத்ரா, அசன்சோல், துர்காப்பூர், ராம்பூர், மல்டா, பர்சாய், கிஷன்கஞ்ச், நியூ ஜல்பைகுரி, நியூ கோச்பெஹர்ம், நியூ அலிபுதூர், நியூ பங்கைகாவ்ன், ரங்கியா ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் ஒரு ஈரடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் உள்பட 15 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com