தன்வந்திரி சாலையில் இன்று தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை

தீபாவளியையொட்டி,   தன்வந்திரி சாலையில் தனியார் வாகனங்களை நிறுத்த செவ்வாய்க்கிழமை (அக். 17)  தடை விதிக்கபட்டுள்ளது.

தீபாவளியையொட்டி,   தன்வந்திரி சாலையில் தனியார் வாகனங்களை நிறுத்த செவ்வாய்க்கிழமை (அக். 17)  தடை விதிக்கபட்டுள்ளது.
இதுகுறித்து  பெங்களூரு மாநகர போக்குவரத்து போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளியையொட்டி,  அக்டோபர் 17-ஆம் தேதி வெளியூர் பயணிகள் அதிக அளவில் மெஜஸ்டிக் பேருந்து நிலையத்துக்கு வருகை புரிவார்கள்.  இதனால்,  ரயில் நிலையச் சாலை,  தன்வந்திரி சாலை,  பிளாட்பாரச் சாலை,  கோடேஸ் சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனை கருத்தில் கொண்டு அக்.  17-ஆம் தேதி தன்வந்திரி,  பிளாட்பாரம் சாலைகளில் தனியார் பேருந்துகளை நிறுத்தத் தடை விதிக்கபட்டுள்ளது.
மைசூரு,  குடகு மாவட்டங்களுக்கும்,  கேரளா மாநிலத்துக்குச் செல்லும் பேருந்துகள், தமிழக அரசின் சாதாரணப் பேருந்துகள் மைசூரு சாலையில் உள்ள சேட்டிலைட் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.  தமிழகத்துக்குச் செல்லும் சொகுசு பேருந்துகள் சாந்தி நகர் பேருந்து நிலையத்திலிருந்து
இயக்கப்படும்.
தாவணகெரே மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் சிக்லால்பாக் அருகிலிருந்து இயக்கப்படும்.  சிவமொக்கா மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் யஸ்வந்தபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பயணிகள் கே.ஜி.சாலை, சேஷாத்ரிசாலை, சுபேதார் சத்திரம்சாலை, பிளாட்பாரம்சாலை, கிருஷ்ணாமில்சாலை உள்ளிட்ட சாலைகளில் செல்லாமல் மாற்றுச் சாலையில் செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com