"முதுகெலும்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை உயர்வு'

பெங்களூரில் முதுகெலும்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது என்று முதுகெலும்பு வல்லுநர் கரிமா அனாதனி கூறினார்.

பெங்களூரில் முதுகெலும்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது என்று முதுகெலும்பு வல்லுநர் கரிமா அனாதனி கூறினார்.
பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்ற முதுகெலும்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியது:-
பெங்களூரு,  மும்பை,  தில்லி, புணே உள்ளிட்ட பெரும் நகரங்களில் முதுகெலும்பு பிரச்னையால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்த 4 நகரங்களிலும் 16 வயது முதல் 34 வயதுக்குள்பட்டோர் முதுகெலும்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 சதவீதமாக உள்ளது.  இதற்கு வாகனங்களை ஓட்டுவதும், நீண்ட நேரம் இருக்கையில் அமர்ந்து பணியாற்றுவதும் முக்கிய காரணங்களாகும்.
முதுகெலும்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்பக் கட்டத்திலேயே அதற்கான சிகிச்சை பெறுவது அவசியம். அதனை நீட்டிக்க விட்டால் அது பல பிரச்னைகளுக்கும் முக்கிய காரணமாகிவிடும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com