கிராமங்களுக்கு வைஃபை வசதி அளிக்க தனியார் நிறுவனம் ஆர்வம்

தேசிய அளவில் கிராமங்களுக்கு வைஃபை வசதி வழங்க முடிவு செய்துள்ளதாக மார்காடெல் நிறுவன தலைவர் நாராயணன் ராஜகோபால் தெரிவித்தார்.

தேசிய அளவில் கிராமங்களுக்கு வைஃபை வசதி வழங்க முடிவு செய்துள்ளதாக மார்காடெல் நிறுவன தலைவர் நாராயணன் ராஜகோபால் தெரிவித்தார்.
பெங்களூரில் வியாழக்கிழமை அந்நிறுவனத்தின் வைஃபை சேவையை அறிமுகம் செய்து அவர் பேசியது:
தேசிய அளவில் மக்கள்தொகையில் 60 சதம் பேர் இணையதள வசதியைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பல நேரங்களில் அவர்களுக்கு இணையதள வசதி சரியாக கிடைப்பதில்லை. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசின் எண்ம திட்டத்தில் மார்காடெல் வைஃபை வசதியை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
நகரம், கிராமங்களில் வைக்கப்பட்டுள்ள எங்கள் நிறுவனத்தின் கோபுரங்கள் மூலம் அரைகிலோ மீட்டர் சுற்றளவில் வைஃபை வசதியை எளிதாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த வசதி மூலம் தேசிய அளவில் சுற்றுலாவை மேம்படுத்த உதவும். எனவே, கடைக்கோடி கிராமங்களில் வசிப்பவர்களும் வைஃபை வசதியை வழங்க முடிவு செய்து, அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளோம்.
5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வைஃபை வசதியை அளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com