ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்தி: கர்நாடக மாநில ஆசிரியர் நல நிதியத்தில் இருந்து ஆசிரியர் மற்றும் முன்னாள் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு மாவட்ட மற்றும் பல்கலைக்கழக அளவில் திறன்வாய்ந்த மாணவர் கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2017-18-ஆம் ஆண்டில் திறன்வாய்ந்த மாணவர் கல்வி உதவித்தொகை பெற ஆசிரியர் மற்றும் முன்னாள் ஆசிரியர்களின் குழந்தைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2017-ஆம் ஆண்டில் நடந்த 2016-17-ஆம் கல்வியாண்டுக்கான எஸ்எஸ்எல்சி, இரண்டாம் ஆண்டு பியூசி, இளநிலை பட்டப்படிப்பின் இறுதியாண்டு (பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிஎட், பிசிஏ, பிபிஎம், பிஎச்எம், எல்எல்பி, பிஇ, எம்பிபிஎஸ்) மற்றும் முதுநிலை பட்டப்படிப்பின் முதலாண்டு (எம்ஏ, எம்எஸ்சி, எம்காம், எம்எஸ்) தேர்வுகளில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களிடம் இருந்து மதிப்பெண் பட்டியலுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை பரிசீலித்து, கல்வித்திறன் தகுதி அடிப்படையில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பப் படிவங்களை  இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். நிறைவுசெய்த விண்ணப்பங்களை அக்.31-ஆம் தேதிக்குள் நிதியத்தின் அலுவலகங்களில் ஒப்படைக்கலாம். காலதாமதமாக வந்துசேரும் விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் நிராகரிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com