மகா சிவராத்திரி: சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

மகா சிவாராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மகா சிவாராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சர்வதேச அளவில் சிறப்பாக கொண்டாடப்படும் மகா சிவராத்திரியையொட்டி கர்நாடகத்தில் செவ்வாய்க்கிழமை சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மாசி மாதம் வரும் அமாவாசைக்கு முந்தைய நாளில் மகாசிவராத்திரியைக் கொண்டாடுவது வழக்கம். 
அதன்படி செவ்வாய்க்கிழமை பெங்களூரு அல்சூர் சோமேஸ்வரன் கோயில், மல்லேஸ்வரம் காடுமல்லேஸ்வரா கோயில், கவிபுரம் கவி கங்காதரேஸ்வரா கோயில், மாகடிசாலையில் உள்ள பசவேஸ்வரா கோயில், எச்.ஏ.எல் ஏர்போர்ட்சாலையில் உள்ள சிவன் கோயில், கனகபுரா சாலையில் உள்ள வாழும்கலை அமைப்பு மையத்தில் உள்ள சிவன் கோயில், சிக்பள்ளாபூருவில் உள்ள யோக நந்தீஷ்வரசுவாமி கோயில், நஞ்சன்கூடு நஞ்சுண்டசுவாமி கோயில், தலக்காடு வைத்தியநாதேஸ்வரா கோயில், முடுக்குதொரே மல்லிகார்ஜுனசுவாமி கோயில், தங்கவயல் கோடி லிங்கேஸ்வரா கோயில் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் சிவன் கோவிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com