பொங்கல்: பெங்களூரில் கைத்தறி மற்றும் கைவினைப் பொருள் கண்காட்சி

பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பெங்களூரு சித்ரகலா பரிஷத்தில் இக் கண்காட்சியை நடிகை சுபா பூன்ஜா  தொடக்கிவைத்தார்.இதுகுறித்து கர்நாடக சித்ரகலா பரிஷத்தின் பொதுச் செயலாளரும்,  கண்காட்சியின் நிர்வாகியுமான எம்.ஜே.கமலாக்ஷி கூறியது:
தமிழர்கள் மட்டுமன்றி விவசாயிகள் அனைவரும் கொண்டாடும் பண்டிகையாக பொங்கல் திகழ்கிறது. கன்னடர்கள் இதனை சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். பொங்கல் பண்டியையொட்டி கர்நாடக சித்தர கலாபரிஷத்தின் சார்பில் ஜன. 12-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெற உள்ளது. 
இக் கண்காட்சியில் தேசிய அளவில் கைவினைக் கலைஞர்கள் தயாரித்துள்ள கைவினைப் பொருள் தயாரிப்புகள், கைத்தறி ஜவுளிகள் இடம் பெற்றுள்ளன. மத்திய பிரதேச மாநிலத்தின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பனாரஸி சேலைகள், கதர் ஆடைகள், குஜராத்தை சேர்ந்த கண்ணாடிகள் பதிக்கப்பட்ட சேலைகள், அலங்காரப் பொருள்கள், ஜவுளிகள், மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பருத்தி, பட்டுச் சேலைகள், மர வேலைபாடுகள், சணல் செருப்புகள், ஆபரணங்கள், பொம்மைகள், தரைவிரிப்புகள், புல் கால்மிதியடிகள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியில் கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திர மாநிங்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையிலான பட்டு, பருத்தி ஆடைகள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சி தினமும் காலை 11 மணி முதல் மாலை 8 மணிவரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும் என்றார். 
பேட்டியின் போது, கர்நாடக சித்தரகலா பரிஷத்தின் துணை பொதுச் செயலாளர் அப்பாஜெய்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com