சட்ட விரோத சுரங்க முறைகேடு: முதல்வர் அலுவலக அதிகாரிகளுக்கும் தொடர்பு: குமாரசாமி குற்றச்சாட்டு

சட்ட விரோத சுரங்கமுறைகேட்டில் முதல்வர் சித்தராமையாவின் அலுவலக அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்று மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி குற்றம்சாட்டினார்.

சட்ட விரோத சுரங்கமுறைகேட்டில் முதல்வர் சித்தராமையாவின் அலுவலக அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்று மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி குற்றம்சாட்டினார்.
பெங்களூரில் அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
முதல்வர் சித்தராமையா பதவியேற்றபிறகு, அவரது அலுவலக அதிகாரிகள் கர்நாடக அரசுக்குச் சொந்தமான மைசூரு மினரல்ஸ் நிறுவனத்தில் இருந்து ரூ.5450கோடிமதிப்பிலான இரும்புத்தாதுவை பெல்லாரி மாவட்டத்தின் சந்தூரில் இருந்து சட்டவிரோதமாக தோண்டியெடுத்து, எடுத்துச்சென்றுள்ளனர்.
முதல்வர் அலுவலகத்தின் உயரதிகாரிகள், அரசியல்வாதிகளின் துணை இல்லாமல் இதுபோன்ற முறைகேடுகள் நடக்கவாய்ப்பில்லை. தான் கூறிக்கொள்வதுபோல சித்தராமையா நேர்மையானவராக இருந்தால், இந்தவிவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடதயாரா?
முந்தைய பாஜக அரசை காட்டிலும் இன்றைய காங்கிரஸ் அரசு மிகவும் மோசமானதாக உள்ளது. இந்த விவகாரத்தை கிடப்பில்போடாமல் தீவிரமாக மக்களிடம் கொண்டுசெல்வேன். பெல்லாரி மாவட்டத்தின் சந்தூர் வட்டத்தில் உள்ள திம்மப்பனகுண்டி, சுப்பராயனஹள்ளி இருப்புத்தாது சுரங்கங்களில் சுரங்கப்பணியில் ஈடுபட பல்வேறு நிறுவனங்களுக்கு 2014 நவ.27 முதல் 2017 மார்ச் 31-ஆம் தேதிவரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் ஆண்டுக்கு 30 லட்சம் டன் இரும்புத்தாதுவை தான் தோண்டலாம். ஆனால் இந்நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக இரும்புத்தாதுவை தோண்டி எடுத்துள்ளன. இதுபோன்ற பல முறைகேடுகள் மைசூரு மினரல்ஸ் நிறுவனத்தின் தணிக்கை அறிக்கையில் காணப்படுகின்றன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com