ஜன.28-இல் திருவள்ளுவர் நாள் விழா

பெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில், பெங்களூரில் ஜன.28-ஆம் தேதி திருவள்ளுவர் நாள் விழா மற்றும் பேரணி நடைபெறவிருக்கிறது.

பெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில், பெங்களூரில் ஜன.28-ஆம் தேதி திருவள்ளுவர் நாள் விழா மற்றும் பேரணி நடைபெறவிருக்கிறது.
இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
2009-ஆம் ஆண்டு பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட பிறகு, பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் நாள் விழாவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பெங்களூரில் 40 லட்சத்துக்கும் அதிகமாக, கர்நாடகத்தில் ஒருகோடிக்கும் அதிகமான தமிழர்கள் பல்லாண்டு காலமாக வாழ்ந்து வருகிறார்கள்.
கர்நாடகத் தமிழர்களின் அடையாளமாக விளங்கும் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் சார்பில் திருவள்ளுவரை போற்றுவதற்கு விழா எடுப்பதோடு, மொழிச் சிறுபான்மையினரான தமிழர்களுக்கு உரிமை பெற்றுதருவதும் நமது தலையாய நோக்கமாக விளங்கிவருகிறது.
இதற்காக திருவள்ளுவர் நாள் விழா மற்றும் பேரணியை நடத்தி தமிழர்களிடையே நிலவும் ஒற்றுமையை பலப்படுத்திவருகிறோம். அந்தவகையில், நிகழாண்டுக்கான திருவள்ளுவர் நாள்விழா மற்றும் பேரணி வருகிற ஜன.28-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10மணிக்கு நடக்கவிருக்கிறது.
இந்த பேரணியில் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், பெங்களூரில் உள்ள பெரும்பாலான தமிழர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் பேரணியில் பங்கேற்க உள்ளனர். பேரணியில் நாட்டுப்புறக் கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறவிருக்கின்றன. பேரணியில் முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் கே.ஜே.ஜார்ஜ், ரோஷன்பெய்க், முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, மஜத மாநிலத்தலைவர்குமாரசாமி, மேயர் ஆர்.சம்பத்ராஜ், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொள்கிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com